164:
இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டால்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சிரு ளாவ தறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சிரு ளாவ தறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.
பொருள் விளக்கம்
-------------------------
அகல் இருப்பினும், இருளை ஓட்டிப் பொருள் களை விளக்குகின்ற சுடரை அணைத்து
விட்டால், அவ்வகலுக்கு உள்ள வாழ்நாள் முடிந்ததாம். (அது போல்வதே உடம்பின்
வாழ்நாளும், அஃதாவது, உயிர் உள்ள அளவே வாழ்வும், அது நீங்கிய பொழுதே கேடும்
உடம்பிற்கு உளவாகும்.) இதனை அறியாமல் உடம்பையே பொருளாகக் கருதி
அறிவில்லாதவர் ஆரவாரிப்பர். பொழுது விடிந்தும் இருளில் கிடத்தலோடு ஒப்ப
வழியறியாது தடுமாறும் குருடரைப் போல, மேற்சொல்லிய உடம்பின் இயல்பு கண்கூடாக
விளங்கிநிற்கவும் உலகம் அதனை அறியாது உடம்பைப்பற்றிய பற்றில் அழுந்திக்
கிடந்து, அதற்கு மேற்குறித்த நிலை வரும்பொழுது துயருறுதல் இரங்கத்தக்கது.
Romanized
-----------------
iṭiñcil irukka viḷakkeri koṇṭāl
muṭiñca taṟiyār muḻaṅkuvar mūṭar
viṭiñciru ḷāva taṟiyā ulakam
paṭiñcu kiṭantu pataikkiṉṟa vāṟē.
muṭiñca taṟiyār muḻaṅkuvar mūṭar
viṭiñciru ḷāva taṟiyā ulakam
paṭiñcu kiṭantu pataikkiṉṟa vāṟē.
Meaning-[Lamp Remained; Flame Died ]
------------------------------------
The lamp remains but the flame is out,
Loud the fools lament but the truth ignore;
Night follows day--this they fail to grasp,
And thus immersed fall and moan,
Ever sobbing more and more.
No comments:
Post a Comment