Pages

Sunday, December 9, 2012

S.No: 0017 (verse 81-85)


81: பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.

What availeth thee now to be born,
If to the Lord, the meed of penance you deny?
The Lord made me, my task assigned,
In sweetest Tamil His Glory to expound.

82: ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.

While Time's unbroken chain trailed its nine Yuga's length,
Wisdom's Mistress into Nandi's City passed,
And bathed His Feet in Wisdom's loving stream;
And I sat and watched, under the sacred Bodhi tree.

83: செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கேள் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தானே.

I sought the way countless Devas, Asuras, humans take
To scale the heights; all wisdom conquered;
Thus a Shiv Muni I grew and Siddha true,
Came down here through the cerulean blue.

84: சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே.

Of Books that glow and thrill the heart,
The Vedas stand in truth unsurpassed,
The Lord who, the center holding,
Bodied forth the Vedic chants;
Likewise in His Grace to me gave this body-temple to hold.

85: யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

All the world may well attain the Bliss I have;
Who hold firm to the Heavenly secret the Books impart,
Who chant the hymns that thrill the flesh
And swell the heart,
They, sure, take their place in foremost rank.