Pages

Sunday, December 30, 2012

[hymn-127]-Daily 1 hymn of Thirumanthiram with Explanation

127
சிவமாகிய எங்குந் தாமாகிய
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கிய
இருந்தார் முக்காலைத்து இயல்பைதக் குறித்தங்கு
இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே.

பொருள் விளக்கம்:
-------------------------
சித்தத்துள்ளே சிவனைக் காண்பதே பிறவிப் பயன் என்று இருந்த சித்தர் பெருமக்கள், சிவசொரூபமாகி (சிவம் ஆகி) எங்கும் – காணும் இடமெல்லாம் காணப்படுபவர்கள் தாங்களே ஆகி, எங்கும் நிறைந்திருந்தனர். நடப்பவை யெல்லாம் சிவன் செயல் என்று கண்டுணர்ந்தனர்(நோக்கி). நிகழ்காலம் எதிர்காலம் இறந்தகாலம் என்னும் முக்காலங்களின் இயல்பையும் அறிந்து, நான் எனது என்னும் செருக்கொழிந்து (இழிவு எய்திச்) செயலற்றிருந்தனர். சோம்பு- செயலற்றிருத்தல். அருணகிரியார் சொன்ன “ சும்மா இரு சொல் அற”. என்ற நிலை இதுவே.

Romanized
-------------
civamākiya ekun tāmākiya
iruntār civaceyal yāvaiyum nōkkiya
iruntār mukkālaittu iyalpaitak kuittaku
iruntār iavuvantu eytiya cōmpē.


MEANING-[Siddhas Lose Themselves in Divine Impassivity ]
---------------------------------------------
-->

In Siva they remained seeing themselves in all
Remained thus mutely gazing at Siva s works manifold
In silence witnessing Time s three tenses
They remained lost
While Divine Impassivity spread its sable wings.