135:
சத்த முதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடாற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.
சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடாற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.
பொருள் விளக்கம்
-------------------
சத்தமுதல் ஐந்து - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன் இச்சைகலும், ஆசைகளும் அவை தோன்றிய விதமே, தானே அடங்கி அவியப் பெற்றால், சித்தமாகிய ஆன்மாவுக்குச் சித்தாகிய பரம் பொருளோடு இரண்டறக் கலப்படதன்றி வேறு போக்கிடமில்லை. பரவெளியில், பரமனோடு, ஆன்ம ஒளி அடங்கும் இன்ப நிலை அது. எனவே, நான் கூறும் உபதேசம் இதையே பொருளாகக் கொண்டு, பின்பற்றி அருள்நீரால் மனத்தூய்மை பெறுவாயாக, சத்தம் - ஓசை உணரும் மெய். சுத்தவெளி - ஆகாயம். சுடரில் சுடர்சேரும் - சோதியோடு சோதி கலக்கும். அத்தம் - உபதேசப் பொருள், வழி. அப்பு - தண்ணீர். இங்கே அருளுரை.
Romanized
-------------
catta mutal aintun taṉvaḻit tāṉcāril
cittukkuc cittaṉṟi cērviṭam vēṟuṇṭō
cutta veḷiyiṟ cuṭāṟ cuṭarcērum
attam itukuṟit tāṇṭukoḷ appilē.
cittukkuc cittaṉṟi cērviṭam vēṟuṇṭō
cutta veḷiyiṟ cuṭāṟ cuṭarcērum
attam itukuṟit tāṇṭukoḷ appilē.
Meaning-[When the Five Senses Take Cit's Way, They Reach Cit ]
-------------------------------------------------------------------
When the senses Five, sound commencing, Cit's way take,
Where shall the Cit go but to the Cit?
In space light mingles but with Light,
Note this, as doth salt in the sea vast.