Pages

Wednesday, December 19, 2012

Daily 1 hymn of Thirumanthiram with Explanation-[hymn-116]



116.
வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயி லிருந்து குடிகொண்ட கோன் நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய் எழுஞ் சூரிய னாமே.

பொருள் விளக்கம்:
காட்டில் மூங்கில் வெறும் மரமாகதான் உள்ளது. ஆனால், அந்த மூங்கில் ஒன்றோடொன்று உரசுகிறபோது அதிலிரின்து நெருப்பு வெளிப்படுகிறது. மூங்கில் உள்ளிருக்கும் நெருப்புப்பொல, இந்த உடம்பாகிய கோயிலுக்குள்ளே இறைவனாகிய நந்தி- ஆன்மாக்களின் தலைவன் கோயிலுக்குள்ளே எழுந்தருளியுள்ளான். தாயைக் காட்டிலும் மிகுந்த பாசம் உடையவன் அவன். ஆணவம், மாயை என்னும் மன அழுக்குகள் மூன்றையும் கழுவி அகற்ற, அருளை வெள்ளமெனப் பொழிந்து, உள்ளதுள்ளே பேரொளிப் பிழம்பாகத் தோன்றி எழும் ஞான சூரியன் அவனே.

English:
vEyin ezhunGkanal pOlEim meyyenum
kOyi liruNdhu kudikonNta kOn NaNdhi
thAyinum mummalam mARRith thayAennum
thOyama dhaay ezhunY chUriya nAmE.

Meaning:
Like the spark that within the bamboo indwells,
So, Nandi Lord, from this body-temple flamed;
With sweet compassion gentler than a mother's,
He shattered the Impurities Three And
 like unto the sun on the ocean of mercy arose.