Pages

Tuesday, January 1, 2013

[hymn-129]-Daily 1 hymn of Thirumanthiram with Explanation


129:
தூங்கிக் கண்டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கியக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கியக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கியக்கண் டார்நிலை சொல்வதுவ் வாறே.
பொருள் விளக்கம்
----------------------------------
எப்படிச் சோம்பர் என்பதற்குச் செயலற்று இருப்பது (அதாவது, வேறு புறச் செயல்கள் இல்லாமல் சிவ சிந்தனையே நினைவிலிருத்தித் தியானிப்பது) என்பது பொருளோ,  அதே போல் இங்கே தூங்கி என்பது ஆழ்ந்த உறக்கம் ஆகாது. கண் மூடிச்சிவ சிந்தனையில் ஒன்றி இருப்பதே இங்கு தூக்கம் எனப்பட்டது. இப்படித் தூங்கி ( தியான நிலையில் சித்தர்கள்) தமக்குள்ளே சிவலோகம் கண்டனர். சிவ யோகமுன் கண்டனர். சிவனோடு இரண்டறக் கலந்த இன்ப நிலையும் பெற்றனர். இப்படித் தியான சமாதியில் திளைத்தவர்கள் பெருமையை, ஆற்றலை, உயர்ந்த நிலையை எப்படிச் சொல்லில் விளக்குவது? அது இயலாத ஒன்று. போகம்- இரண்டறக் கலத்தல். அனுபவித்தே உணர இயலும் என்பது பொருள்.
Romanized
---------------
tūṅkik kaṇṭārciva lōkamum tammuḷḷē
tūṅkiyakka ṭārciva yōkamum tammuḷḷē
tūṅkiyakka ṭārciva pōkamum tammuḷḷē
tūṅkiyakka ṭārnilai colvatuv vāṟē.
MEANING- [Sleeping Still They Perceive]
----------------------------
Sleeping in themselves they saw Siva s World
Sleeping in themselves they saw Siva s Yoga
Sleeping in themselves they saw Siva s Bhoga
How then describe the minds
Of those who sleeping saw?