133
பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கிய
இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே.
பொருள் விளக்கம்
இறைவன் திருவருள் துணையால் ஆன்மாக்கள் பெருமை பெறுக்கின்றன. திருவருள் பெற இயலாத உயிர்கள் சிறுமைப்பட்டுத் துன்பம் அடைகின்றன. ஆனால், இறைவன் இவை இரண்டும் கடந்தவன். அனுமுதல் அண்டம் வரை உள்ள அனைத்தின் பெருமை சிறுமை தெரிந்தவன். இறைவனைப் போலப் பொருள்களின் பெருமை சிறுமை எளிமை அறிந்தவர் யார் இருக்கிறார்கள்? அருமை- அருமையானது. எளிதில் கிடைக்காது. அடைய முடியாதது. இப்படி பெருமை சிறுமை தெரிந்தவர்கள், ஆமையைப்போல் (அது தன் தலை கால்களை ஒருசேர உள்ளுக்கு இழுத்துக் கொள்வதைப் போலத்) தங்கள் ஐம்பொறிப் புலன்களை அடக்கி ஆள்பவர்கள் புரை அற்றே குறை இல்லாத இம்மை மறுமை இரண்டும் உணர்ந்தவராயிருப்பர்.
Romanized
------------------
perumai ciṟumai aṟintem pirāṉpōl
arumai eḷimai aṟintaṟi vārār
orumaiyuḷ āmaipōl uḷaintu aṭakkiya
irumaiyuṅ kēṭṭirun tārpurai aṟṟē
Meaning-[ Senses Controlled They Saw This World and Next]
-----------------------------------------------------------------------------------------
Who there be who like our Lord distinct know ?
The great and the small the difficult and the facile,
They unto tortoise drawing in senses five under the shell,
They heard and saw This and Next all impurities dispelled.