Pages

Wednesday, January 2, 2013

[hymn-130]-Daily 1 hymn of Thirumanthiram with Explanation

130:
எவ்வாறு காண்பான் அறிவு தனக்குஎல்லை
அவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே.

பொருள் விளக்கம்
--------------------------------
முன் பாடலில் சொன்னபடி, தவயோகத் தியானத்தில் இருப்பவன், எந்த அளவுக்கு மெய்யறிவும் இறை உணர்வும் உடையவனாக இருக்கிறானோ, அந்த அளவுக்கு ஆதியாகிய பரம்பொருளும் அவனுக்கு அருள் செய்வான். ஒப்புவமை கூற இயலாத பெருமை உடைய நடன சபையில், உமையவள் காணத் திருக்கூத்தாடும், சிவந்த அந்தி வானில் தெரியும் மாணிக்கச் செம்பருதி போன்ற, அழகிய சிவந்த அருள் சுடரான சிவபெருமான், அவரவர் பக்திக்கும் பக்குவத்துக்கும் ஏற்ப அருள் பாலிப்பான்.
Romanized
-------------------
evvāṟu kāṇpāṉ aṟivu taṉakkuellai
avvāṟu aruṭceyvaṉ ātiaraṉ tāṉum
ovvāta maṉṟuḷ umaikāṇa āṭiṭum
cevvāṉiṟ ceyya ceḻuñcuṭar māṇikkamē.

MEANING- [ As Much as You Strive So Much is His Grace Bestowed ]
-------------------------------------------------------------------------
Even as you strive to reach Wisdom s bounds
Even so on you Hara the Being First His Grace bestows
In Sabha unique He dances for Uma to behold
Like a Flaming Ruby in the Flaming Sky