Pages

Thursday, December 6, 2012

S.No: 0015 (verse 71-75)


71: மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே.

The Lord it was who spoke to the Three and to the Four,
He spoke of Death futile and of Birth according;
At once of God and the three Radiant Lights;
Yet His surpassing greatness ne'er fully revealed.

72: எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே.

"The Heavens in eight directions may rain,
Yet shall you the Holy rites and pure perform;"
So spoke He of the matted locks and coral hue,
And His Grace conferred on the steadfast Four.


5 திருமூலர் வரலாறு HISTORY OF TIRUMULAR


73: நந்தி திருவடி நான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்
தந்தி மதிபுனை அரனடி நாள்தொறும்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.

High on my bowed head Nandi's sacred Feet I bore,
Intoning loud His Name in my heart's deepest core,
Daily musing on Hara wearing high the crescent moon,
Thus I ventured the Agamas to compose.

74: செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பிலா எழுகோடி யுகமிருந் தேனே.

Flashed in my mind the mystic name of Sivagama;
Straight I rose to Arul Nandi's Holy Feet;
These eyes witnessed, enthralled,
The surpassing Dance in Holy Sabh;
Thus I lived and joyed for seven crore Yuga.

75: இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.

Hear O! Indra, what urged me thus?
She the Holy One, Lady of the Universe, rich and vast
In devotion deep and true, Her I adored
And with ardour unceasing, here I pursued.