183:
பருவூசி
ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே.
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே.
பொழிப்புரை
---------------
---------------
நூலால் தைக்கும் நுண்ணூசிபோலாது, சணற்புரியால் தைக்கின்ற பருவூசிகள்
ஐந்தும் ஒரு சணற்பைக்குள் இருக்கின்றன. அவை பருவூசியாயினும் பறக்கும் தன்மை
வாய்ந்த யானைகளாம். அத்தன்மையவான அவை மெலிவடையுமாயின், அவை தங்கியுள்ள
பையும் பறக்கின்ற தன்மையை உடையதாகிவிடும்.
Romanized
-------------
-------------
paruvūci aintumōr paiyiṉuḷ vāḻum
paruvūci aintum paṟakkum virukam
paruvūci aintum paṉittalaip paṭṭāl
paruvūcip paiyum paṟakkiṉṟa vāṟē.
paruvūci aintum paṟakkum virukam
paruvūci aintum paṉittalaip paṭṭāl
paruvūcip paiyum paṟakkiṉṟa vāṟē.
Meaning-[Subdue
the Senses, Birth Cycle Ends]
-----------------------------------------------
The
five needles thick, this bag of senses holds
The
five needles thick in this bestial body roam free;
If
the five needles thick you tame and subdue,
No
more this bag that life's cycle involves.