Pages

Tuesday, November 27, 2012

S.No: 0007 (verse 31-35)


31: மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.
Of the Earth is He, of the sky is He! Well He be!
Of the Heaven is He, of truest Gold is He! Well He be!
Of sweetest song's inmost rapture is He!
Him my love besought, from heart's central core.
32: தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீருலகேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
பாவு பிரான்அருட் பாடலு மாமே.

The Lord of Gods, and of ours too,
The Lord who all space pervades,
And the seven Worlds, ocean-bound, transcends;
None do know His nature true,
How then may we sing His Grace Divine?
33: பதிபல வாயது பண்டுஇவ் வுலகம்
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.

Many the Gods this hoary world adores,
Many the rituals; many the songs they sing;
But knowing not the One Truth, of Wisdom bereft
Unillumined, they can but droop at heart.
34: சாந்து கமழுங் கவா஢யின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.

Like the fragrance of the musk the musk-deer constant emits,
Is the True Path which the Lord to Celestials imparts.
Sitting or moving, I chant the rich essence of His Name,
His thousand Names that are with spark divine.
35: ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவு மாமே.

Even the Path impassable is foot-easy made,
If you the Lord praise and Him adore;
The East and West and directions all
He does transmute--and thus dances He the Lord.