137
அடங்குபேர
ண்டத்து அணுஅண்டம் சென்றங்கு
இடங்கொண்டது
இல்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும்
நின்ற உயிர்கரை காணில்
திடம்பெற
நின்றான் திருவடி தானே.
பொருள் விளக்கம்
--------------------------------
எல்லா உயிர்களும்,
உலகங்களும் ஒன்றி அடஙும் பேர்ண்டப் பெருவெளியில், சிவ பரம்பொருளின் அனு அண்டம் இடம்
கொண்டுள்ளது. இதுவே நிலைமை. இதில் மாற்றம் இல்லை. எனவே உயிர்களின் உடல்களில் எல்லாம்
அடங்கியிரிக்கும் உயிர்கள், தாங்கள் முடிவாக சென்று சேற வேண்டிய இடம் எது என்று எண்ணிப்
பார்த்தால், அது இறைவன் திருவடியே என்று தெரியவரும்.கடம்-உடல்.கரை- சேருமிடம்.திடம்-உறுதி.
Romanized
-------------
aṭaṅkupēra ṇṭattu aṇuaṇṭam ceṉṟaṅku
iṭaṅkoṇṭatu illai ituvaṉṟi vēṟuṇṭō
kaṭantoṟum niṉṟa uyirkarai kāṇil
tiṭampeṟa niṉṟāṉ tiruvaṭi tāṉē.
Meaning-[As
Atom Merges in theVast Jiva Merges in Siva]
--------------------------------------------------------------------------------
The tiny atom
swimming the Universe vast,
Merges in the
Vast no separate existence knows-- ;
So the Spirit’s
plastic stress sweeping through bodies all,
At sight of His Holy
Feet discovers its Ancient Home.