96: பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்
ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்
நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்
தேடவல் லார்நெறி தேடகில் லேனே.
ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்
நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்
தேடவல் லார்நெறி தேடகில் லேனே.
I know not the way singers sing,
I know not the way dancers dance,
I know not the way seekers seek,
I know not the way searchers search.
97: மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலு மாமே.
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலு மாமே.
By words spoken in Truth's luminous accents,
Rising on sweetest music's pious heights
Even Brahma who after Him created this our world,
All, all, seek His imperishable Light.
98: தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
இத்துடன் வேறா இருந்து துதிசெயும்
பத்திமை யால் இப் பயனறி யாரே.
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
இத்துடன் வேறா இருந்து துதிசெயும்
பத்திமை யால் இப் பயனறி யாரே.
At the foot of the Sacred Hills, the Rishis and Devas sat,
Seeking Liberation's endless Bliss,
Devoutly praising, yet knowing not,
So this deep Mystery I here expound.
7 திருமந்திரத் தொகைச் சிறப்பு THE HOLY HYMNS THREE THOUSAND
99: மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே.
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே.
Three Thousand Holy Hymns, Mula in Tamil composed,
Did He, Nandi, reveal for all the world to know,
Wake early at dawn and pour forth the strains
Surely you'll win the splendid soft repose
Of the Bosom of the Lord.
100: வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தருமிவை தானே.
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தருமிவை தானே.
In the Holy Three Thousand is the Salvation Finale
Of the diverse works, true and good;
In the Divine Three Thousand, original and wise,
All knowledge is, special and general.