115.
பதிபசு
பாசம்
எனப்பகர்
மூன்றில்
பதியினைப்
போல்பசு
பாசம்
அனாதி
பதியினைச்
சென்று
அணுகாப்
பசுபாசம்
பதியணு
கில் பசுபாசம்
நிலாவே.
பொருள்
விளக்கம்:
பதி,பசு,பாசம்
என்று சொல்லப்படும்
மூன்றுள், இறைவனைப்
போலவே, அவன்
படைத்த உயிர்களும்,
அவற்றைப் பற்றியிருக்கும்
பந்த பாசங்களும்,
மிகப் பழைமையானவை
(அனாதி-பழைமை)-
தலைவனாகிய இறைவனை
ஆன்மாக்கள் (பசு)
அனுகுவதில்லை, நெருங்குவதில்லை.
காரணம், அவற்றைப்
பற்றியுள்ள பந்தங்கள்-பாசங்கள். ஆனால் இந்த
ஆன்மாக்கள் தலைவனாகிய
பதியை நெருங்கினால்,
அவற்றை பிடித்த
பாசம் நிற்காது.விலகிப் போகும்.பதியை
நாடப் பாசம்
விலகும் என்பது
பொருள்.
ENGLISH
padhipachu pAcham enappakar
mUnRil
padhiyinaip pOlpachu pAcham
anAdhi
padhiyinaich chenRu anNukAp
pachupAcham
padhiyanNu kil pachupAcham
NilaavE.
MEANING
They speak of the Three--Pati, Pasu and Pasa;
Beginningless as Pati, Pasu and Pasa are:
But the Pasu-Pasa nears not the Pati supreme:
Let but Pati touch! the Pasu-Pasa is as naught.