Pages

Sunday, December 16, 2012

Daily 1 hymn of Tirumantiram with Explanation - [hymn-113]

முதல் தந்திரம்  FIRST  TANTRA


1. உபதேசம்   DIVINE INSTRUCTION
113.விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.
பொருள் விளக்கம்:
பரம்பொருள் விண்ணுலகை விட்டிறங்கி, மண்ணுலகை வந்தடைந்து, வினைக்கு இடமான மனித உடம்பெடுத்துத் தண்மை பொருந்திய திருவடிகளை ஆன்மாக்களுக்குப் பாதுகாவலாக வைத்து, உள்ளத்துள்ளே தன் திருவருள் புகச் செய்து கல்மனதைக் கரைத்து, அருள் ஒளியால் நெகிழச் செய்து, ஒப்புவமை கூற இயலாத பேரானந்தப் பெருவெள்ளம் பெருக்கெடுத்தோட, கண்கள் அருள் ஒளி கண்டு களிக்கச் செய்து, மன மயக்கங்கள் என்னும் பாசத் தளைகளை எல்லாம் அறுத் தெறிந்தான்.
                                                                                               
ENGLISH
vinNnNinRu izhiNthu vinaikkItaay meykkonNtu
thanNnNinRa thALaith thalaikkAval munvaiththu
unNnNinRu urukkiyOr oppilA AnaNdhak
kanNnNinRu kAttik kaLimpaRuth thAnE.
                                                                He Descended From Heaven and Filled Me With Grace

MEANING

He come down from Heaven, clothed in body,
Karma to match, stretched forth His cool Feet of Grace, planting them firm
On my head; and lo! inside me He stood, melting my yielding heart;
And filled my eyes with peerless bliss, past all compare,
All impurity dispelled.