163:
முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண் டாண்டினிற்
கெட்ட தெழுபதிற் கேடறி யீரே.
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண் டாண்டினிற்
கெட்ட தெழுபதிற் கேடறி யீரே.
பொருள் விளக்கம்
-------------------------
அறிவில்லாத மக்களே, தாய் வயிற்றில் முட்டை யாய்த் தோற்றம் எடுத்த உடம்பு,
முந்நூறு நாள் காலக் கணக்கில் அங்கே தங்கி வளர்ந்து பின்பு வெளிப்போந்தது.
பின் பன்னிரண்டு ஆண்டுக் காலக்கணக்கில் அதற்கு மணவினை என்னும் பேச்சும்
உலகத்தில் நிகழ்ந்தது; பின் எழுபது ஆண்டுக் காலக் கணக்கில் செயல் இழந்து
கிடந்தது. இவ்வாறு அது ஒவ்வோர் இமையும் அழிவு நெறியிற் சென்று
கொண்டிருத்தலை அறிந்திலீர். அதனால் உமக்குத் துணையாக நீவிர் தேடி வைத்துக்
கொண்டது யாதும் இல்லை.
Romanized
-----------------
muṭṭai piṟantatu munnūṟu nāḷiṉil
iṭṭatu tāṉilai ētēṉum ēḻaikāḷ
paṭṭatu pārmaṇam paṉṉiraṇ ṭāṇṭiṉiṟ
keṭṭa teḻupatiṟ kēṭaṟi yīrē.
iṭṭatu tāṉilai ētēṉum ēḻaikāḷ
paṭṭatu pārmaṇam paṉṉiraṇ ṭāṇṭiṉiṟ
keṭṭa teḻupatiṟ kēṭaṟi yīrē.
Meaning-[ What Did the Body Leave Behind?]
------------------------------------
Three hundred days agone, the foetus emerged,
Naught remains of it now, dear friends, you know;
In twelve years' time it learned to smell the rich odours of life
At seventy it turned to dust--thus briefly ends the show.
No comments:
Post a Comment