148: அடப்பண்ணி
வைத்தார் அடிசிலை உண்டார்
மெடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேயிறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்
தாரே.
பொருள்
விளக்கம்
------------------------------
ஆடுதல்-சமைத்தல்.
அடிசில்-உணவு. மடக்கொடி-பெண். மந்தணம்- உடலுறவு. இறை- இதயம். நொந்தது- வலித்தது.வாய்க்குச்
சுவையாக நன்கு சமைத்து உணவை உண்டு மகிழ்ந்தனர். மனையாளோடு கூடிக் குலவி இன்புற்று மகிழ்ந்தார்.
திடீரென்று ஒருநாள் இடதுபக்கம் நெஞ்சு வலிக்கிறது என்றார். உடனே உடல் கீழே கிடக்கப்
படுத்தார். பின்னர் எழுந்திருக்கவே இல்லை. இறந்தே போனார். இதுதான் வாழ்க்கை. இதுதான்
உடல் அழியக் கூடியது என்பதற்கு அடையாளம்.
Romanized
--------------
aṭappaṇṇi vaittār aṭicilai
uṇṭār
meṭakkoṭi
yāroṭu
mantaṇaṅ koṇṭār
iṭappakka
mēyiṟai
nontatu eṉṟār
kiṭakkap
paṭuttār
kiṭantoḻin
tārē.
Meaning-[Death
Comes Sudden]
-------------------------------------------
The rich repast
was laid and he dined and joyed,
With damsels
sweet in amorous dalliance toyed;
“A little
little pain-- on the left” he moaned
And laid
himself to rest to be gathered to dust.
No comments:
Post a Comment