6: அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே.
Without Him, there be Celestials none,
Without Him, penance is not,
Without Him, naught the Three accomplish,
Without Him, I know not the City's Gate.
7: முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே.
Primal First is He, older than the Co-eval Three
But the Lord is He peerless, unequalled;
Call Him "Father," and Father He to thee,
Inside you He flames in the Lotus of golden hue.
8: தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.
Hotter is He than fire, cooler than water;
And yet none knows of His Grace abounding;
Purer than the child, kinder by far than the mother,
Nearest to Love is He, of the flowing matted locks.
9: பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.
Gold-bewrought, His matted locks fall back and gleam;
Nandi, His name,
My Lord is He, ever by me worshipt;
But none there be whom He worships.
10: தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே.
Holding the worlds apart, as the Heavens high He spreads;
Himself the scorching Fire, Sun and Moon,
Himself the Mother that sends down the rains
Himself the mountains strong and oceans cold.

No comments:
Post a Comment