Pages

Saturday, November 24, 2012

S.No: 0001 (verse 1-5)

கடவுள் வாழ்த்து IN PRAISE OF GOD

1: ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே.

The One is He, the Two His sweet Grace,
In Three He stood, in all the Four witnessed,
The Five He conquered, the Six He filled,
The Seven Worlds pervades, manifests the Eight
And so remains.

2: போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

The Holy One who all life sustains,
Lord of Her, beloved of all the world,
He who spurned Yama, the Southern Qrarter's King
Of Him I sing, His glory and praise.

3: ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே.

He who stands the same to all,
The Pure One, whom immortal Gods adore,
Whom, even they, that daily stand beside, know not,
Him I seek, praise, and meditate.

4: அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.

The Truth of Spaces Vast, Seek of the Universe orb,
Our Haven of Refuge, He bade me seek and find,
Him I praised by night and day,
And praising thus, gloom{-}dispelled,
I held firm in this world of strifes.

5: சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

Search where ye will, there's no God like Siva,
None here below to equal Him in glory;
Lotus like, He, of gleaming matted locks,
Golden in splendour, beyond the worlds, apart.

No comments:

Post a Comment