141:
சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.
பொருள்
விளக்கம்
---------------------------------
நந்தி-ஞானப் பரஞ்சுடர்.பரம்பொருள்.
கண்கள் கண்டு களிக்க வேண்டியவை(சந்திப்பது) இறைவன் திருவடிகளே. மனம் பார்த்து மகிழ
வேண்டியது அந்தச் சிவப் பரம்பொருளின் செம்பொன் திருமேனியையே. வாழ்த்தி வணங்கி வழிபடத்
தக்கது ந்ந்திப் பெருமானின் திருப்பெயரே. அறிவில்- உள்ளத்தில், கொள்ளத் தக்கது- கொண்டொழுகத்
தக்கது நந்தி எம்பெருமானின் உபதேச மொழிகளையே- அருளுரைகளையே. வந்திப்பது- போற்றிப் புகழுதல்.
போதம்- உபதேசம். நெஞ்சிலும் நினைவிலும் நிற்க வேண்டியது- நிலைக்க வேண்டியது பரம்பொருள்
சிந்தனை மட்டுமே என்பது பாடலின் பொருள்.
Romanized
-------------
cantip
patunanti taṉtirut tāḷiṇai
cintip
patunanti ceyya tirumēṉi
vantip
patunanti nāmameṉ vāymaiyāl
puntikkuḷ
niṟpatu nantipoṟ
pōtamē.
Meaning-[Fill Thy
Thoughts With Nandi]
--------------------------------------------------
All they see is Nandi's Holy Feet twain
All they think is Nandi's Holy Form divine
All they
chant is Nandi’s Name I throw,
In all their thoughts Nandi s golden Words
and wise.
No comments:
Post a Comment