Pages

Thursday, December 13, 2012

S.No: 0022 (verse 106-110)

106: சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.

Siva the First, then the Three, and the Five following,
With whom flourished Bindu and Nada,
Nine are they all, yet one and the same--
All these but names of Sankara First.

107: பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமககு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர் அவ் வானவ ராலே.

But if we thus the soul of truth probe and bare,
Aya nor Mal to us no alien Beings are
But Indissolubly Kin to Nandi, the Three Eyed
Blessed be ye all by the Heavenly Three.

108: ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன் தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடுஎன் றானே.

Lying prostrate I adored the Milk-hued One,
While countless Devas stood around in melting prayers lost;
Then spoke the Lord to me:
"To Vishnu and Brahma are I equal;
Be it Yours to give the world
The Grace of My Feet."

109: வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே.

Devas here be none, nor humans that breathe,
Save for Siva's grace, Siva in honeyed-Konrai decked;
No other God could dwell in the silence of your soul,
Other Gods you worship, know they but mortals be.

110: சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.

The ignorant know not, from the First did leap
The Light that flamed into Three and Five;
So blindly groping, lost in maze of words,
Isa, Mal and Aya, to graded ranks assign.

No comments:

Post a Comment