Pages

Thursday, December 13, 2012

S.No: 0021 (verse 101-105)

8 குரு மட வரலாறு THE SPIRITUAL HIERARCHY
-------------------------------------------------------------------
101: வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடம்வரை
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.


Seven are the Holy Order, spiritual and true;
Mula, of the first, from the Himalayas sprung,
In the Tantras Nine and Hymns Three thousand
Propounds the Word of Agama in beauty dight.

102: கலந்தருள் காலாங்கர் தம்பால்அ கோரர்
நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்
புலங்கொள் பரமானந் தர்போக தேவர்
நிலந்திகழ் மூவர் நிராமயத் தோரே.

Kalanga immanent-living, Agora his very next,
Maligai Deva the goodly and the holy Nadhanta,
Paramananta, who the senses conquered and Bhogadeva,
And Mula here breathing--of the Eternal are they all.

9. திரு மும்மூர்த்திகளின் முறைமை
103: அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணா஢ல்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரியயற் காமே.

Limitless youth, the beginning, and end
And measuring out the Time, these four considered
Sankara stands supreme and of His devotees
To Hari and Aya infinite Grace goes.

104: ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.

He, the Being First, and He, the Emerald-hued,
And He of the glowing, original Lotus-seat--
Are these three separate or one continuous whole?
Thus the world in divisions many wrangle!

105: ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம்
பீசம் உலகல் பெருந்தெய்வம் ஆனது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.

Beyond the Two Karmas is Isa seated,
The seed of this world, the mighty God become;
"This" and "That" is Isa--so the thoughtless contend,
The dross but know the basest sediment low.

No comments:

Post a Comment