Pages

Friday, January 4, 2013

[hymn-131]-Daily 1 hymn of Thirumanthiram with Explanation

131
மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றில் ஆடும் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்னை பேறுபெற் றாரே.

பொருள் விளக்கம்
-------------------
முன் பாடலில் சிவப்பரம் பொருளைச் செழுச்சுடர் மாணிக்கம் என்றவர், இந்தப் பாடலிலும் அந்தக் கருத்தை வலியுறுத்துக்கிறார்.மாணிக்கம் சிவந்த ஒளிச்சுடர் வீசும். மரகதம் பச்சை நிறமுடையது. சிவபெருமான் சிவந்த திருமேனி உடையவன். எனவே மாணிக்கம் என்றார். பசுமை நிறம் கொண்ட உமையை மரகதம் என்றார். சிவனுள் சக்தி ஒன்றியிருக்கிறது. சதாசிவம் சக்தியும் சிவமுமாகக் காட்சி தருகிறது. இதையே, ‘ மாணிக்கத்துள் மரகதச் சோதியாய்’ என்றும், மாணிக்கத்துள்ளே ‘மரகத மாடமாய்’ என்றும் கூறினார். (மாடம்- விளக்கேற்றுமிடம், மேலான இடம். சக்தி பீடத்தில் சிவ ஒளிக் காட்சியை இது குறிக்கும்.) இப்படிபட்ட சக்தியும் சிவனும் பொன்னம்பலத்தில் ஆடும் ஆனந்த நடனம் காணப் பெற்று, வணங்கித் தொழுதவர்கள், எத்துணையோ பேறு பெற்றவர்கள். புண்ணியம் செய்தவர்கள்.

Romanized
------------
māṇikkat tuḷḷē marakatac cōtiyāy
māṇikkat tuḷḷē marakata māṭamāy
āṇippoṉ maṉṟil āṭum tirukkūttaip
pēṇit toḻuteṉṉai pēṟupeṟ ṟārē.

MEaning-[The Glorious Beauty of Divine Dance]
-----------------------------------------------------
Inside the ruby like the emerald flaming,
Inside the ruby like the emerald inset
He dances the Holy Dance in the Sabha of purest gold, !
What oh the reward to those who Him adored.

No comments:

Post a Comment