Pages

Monday, December 31, 2012

[hymn-128]-Daily 1 hymn of Thirumanthiram with Explanation


128
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கியடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்
சோம்பர் கண்டார் அச்சுருதிக்கண் தூக்கமே.

பொருள் விளக்கம்
---------------------------------
செயலற்றவர்கள் இருக்குமிடம், தாயுமானவர் பாடியபடி, சிந்தை அடக்கியே சும்ம இருப்பவர்கள் இருக்குமிடம்- தூய பரவெளியாகிய சிவ வெளியிலே அவர்கள் செயலற்றுச் சிந்தையை அடக்கிச் சும்மா கிடப்பதும், அந்தத் தூயதான பரவெளியிலேயே ஆகும். இவர்கள் உணர்வுகள் ஒன்றி இருப்பதும் வேத முடிவான சிவ பெருமான் திருவடிகலேயே. இப்படி செயலற்று நிற்கும் சித்தர்கள்(சோம்பர்) வேதம் ஓதும் விமலனை எண்ணியே யோக நித்திரையும், இன்பத்துயிலும் கண்டனர். சுருதி- வேதம். தூக்கம்- யோக நித்திரை, இன்பத் துயில். சித்தர்கள் தம்மை மறந்து பரவெளியிலேயே இருப்பர், கிடப்பர், உணர்வர், உறங்குனவர் எனபதாம்.இது யோக நிலை. சமாதி அனுபவம்.

Romanized
---------------
cōmpar iruppatu cutta veiyilē
cōmpar kiyaappatum cutta veiyilē
cōmpar uarvu curuti muinti
cōmpar kaṇṭār accurutikka tūkkamē.

MEANING-[Nature of Divine Impassivity]
-----------------------------
Nature of Divine Impassivity
In space pure is Impassivity seated
In space pure It does repose
Impassivity begins where Vedas end
Who Impassivity saw inside Vedas they slept