Pages

Saturday, December 8, 2012

S.No: 0016 (verse 76-80)


76: சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேன்இன்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுடனே உணர்ந் தோமால்.

Sadasiva, Tattva, the Muthamil and Veda
Them I sought not while here I stood;
I held them not in the heart; but soon my mind turned,
And indifference abandoning, realised them all.

77: மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நோரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.

This it was, O Malanga, urged me here to come,
The Veda to expound and the Dance Divine's deep import;
These mysteries occult the Lord first unveiled
To Her of the azure hue and jewels bright.

78: நோரிழை யாவாள் நிரதிச யானந்தப்
பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.

Bright jewelled, the Eternal Bliss named,
She my Saviour, sundering all bonds of birth;
Siva's treasure, Mistress of Avaduthurai cool,
Her Feet I reached and in devotion fast remained.

79: சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.

Fixed in devotion fast I clung to Her Lord-elect,
Rooted firm to Siva who in Avaduthurai smiled;
In devotion fast sought repose under Siva Bodhi's shade,
In devotion fast I chanted
The lyric spell of His countless names.
  
80: இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.

Remained thus prisoned in mortal coil for ages beyond count;
Remained in space where day nor darkness is;
Remained in places where Devas offered praise,
Remained immutably fix't at Nandi's holy Feet and true.