Pages

Saturday, December 22, 2012

Daily 1 hymn of Thirumanthiram with Explanation-[hymn-119]

119.
அறிவுஐம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல
அறிவுஅறி வுள்ளே அழிந்தது போலக்
குறியறி விப்பான் குருபர னாமே. 

பொருள் விளக்கம்

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வாயிலாக, உண்டு, உணர்ந்து, நுகர்ந்து, கேட்டு, கண்டு மகிழ்வதான செயல்களில் ஈடுபட்டுச் சென்று செரும் வழி தெரியாமல், ஆழங்காண முடியாத பிறவிக் கடலில் மூழ்கி, மனித அறிவானது ஆழிகின்றபோது, ஆன்மாக்களுக்கு நல் வழிகாட்டி அருளுபவன் ஞானாசிரியனான சிவபெருமானே ஆவான். நான்றதாகி-தொடர்புடையதாகி. நெறி-வழி, குறி - குறிகோள்.

ENGLISH

aRivaim pulanuDa nEnAn RadhAki
neRiyaRi yAdhuRRa nIrAzam pOla
aRivaRi vuLLE azindhadhu pOlak
kuRiyaRi vippAn kurupara nAmE

MEANING
He Made Sensory Consciousness Merge in God Consciousness
Consciousness hanging on to the senses five,
Knowing not its course as on deep waters drifting,--
Consciousness sensory merging in the Consciousness deep,--
Thus He pointed the Way,--He, the Guru Supreme.