Pages

Wednesday, November 28, 2012

S.No: 0008 (verse 36-40)


-->
36: அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே.

Oh, Heavenly Father, Nandi, the unsurfeiting nectar sweet,
Oh, Bounteous One, Unequalled, First of Time!
Praise Him ever; and even as you praise,
So thine reward will also be.

37: நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன்
வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்து
ஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.

Daily I kneel and chant Nandi's holy Name;
Envisioned, He stands, the Fire-Hued One,
Flaming like the moon in sky; into me He comes,
And throbs and breathes through my mortal flesh.

38: பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் தானே.

I will not cease to speak of Him, the Great, the Rare,
I will not cease to prate of Him, the Form Unborn,
I will not cease to talk of Nandi, the Mighty,
I will never cease, for pure and great am I then!

39: வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும்
ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே.

He, the Divine Light, shining bright in devotee's heart,
He, of the Holy Waters, wherein He sports,
Him shall we praise, Him call, "Our Lord,"
And, thus adoring, His Grace attain.

40: குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும்
நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்
மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே.

Humbled and meek, seek thou the Lord's Feet,
Feet that equal the rays of purest gold serene;
Praise Him with songs of the humble heart
And unpenurious tongue;
To such He comes, the all-fashioning Lord.