Pages

Sunday, January 6, 2013

[hymn 134] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

134
புரையற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரையற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.
பொருள் விளக்கம்
---------------------------------
புரையற்ற பால்- மோர் புரை ஊற்றாத பால். காய்ச்சி ஆறிய பால் தயிராக, அதில் சிறிது மோரை விடுவார்கள். இதற்குப் புரை ஊற்றுதல் அல்லது புரை குத்துதல் என்பது பொருள். இப்படி புரை ஊற்றிய பால் தயிரான பின், கடைந்து, வெண்ணெய் எடுத்துக் காய்ச்சி நெய் ஆக்குவர். இந்த நெய் பாலில் இருந்து வருவதுதான். ஆனால், இந்த நெய் புரை ஊற்றாத பாலில் வெளிப்படையாக தெரிவதில்லை. ஆனாலும், நெய் அந்தப் பாலில் தான் உள்ளது. அதுபோல், அலைபாயாத தெளிந்த சிந்தை உடையவர்கள், நானாசிரியன் அருளிய மூல மந்திரத்தைச் செபித்தபடி, பேச்சற்று, மவுன சமாதியில் இருப்பவர்கள், இவ்வுலகில் மாய உடம்பொழித்து, எல்லையற்ற இறையருட் சோதியில் கலந்து சுத்த சிவமாகி நிலைத்திருப்பர்.
 Romanized
-------------
puraiyaṟṟa pāliu neykalan tāṟpōl
tiraiyaṟṟa cintainal āriya ceppum
uraiyaṟṟu uarvōr uampiku ointāl
karaiyaṟṟa cōti kalantacat tāmē.

Meaning-[Silentness of Waveless Thought]
----------------------------------------------------------
Like the ghee subtly latent in purest milk; 
Into the waveless Thought the Lord in silentness speaks
They who in silentness realise this mortal coil shuffled,
Purity they become in Limitless Light mingling.