Pages

Monday, November 26, 2012

S.No: 0006 (verse 26-30)

26: தொடர்ந்துனின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றாம்கம லம்மலர் மேலே
உடந்திருந் தான்அடிப் புண்ணிய மாமே.

Adore the Lord, who in unbroken continuity stood,

The Lord who protecting over all earth expanded,
Transcending all He stood; over the lotus bloom aloft,
In smiling glory He sat; Holy be His feet!

27: சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து
அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே.

The Infinite of Lotus-Face, rivalling twilight ineffable,
May ours be His Grace Divine!
And they who thus Nandi daily beseech,
Into their Heart, creeping, He comes! He comes!

28: இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே.

Beckoning He stood, He, the All-pervading;
But they who, doubt-tossed, in self-contention lost,
They stood withered at the root;
To those who freely give themselves to the Lord on High,
To them is He the certain, immutable Guide.

29: காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே.

Oh! You, the Unseen, only kin to this forlorn slave,
Let me not falter to embrace Your feet!
For to the heart of Your servant, pure and true
You ever stood even as the axle-pin.

30: வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தானினறு அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியை
நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே.

As the Heavens draw the rains;
Even so will my Lord draw me to Him?
Thus, doubting, many ask.
But like to the mother-cow, for my Nandi I yearn
And all the world, all the world know it too!