Pages

Friday, December 21, 2012

Daily 1 hymn of Thirumanthiram with Explanation-[hymn-118]

118: 
மலங்கள்ஐந் தாமென மாற்றி அருளித்
தலங்கள்ஐந் தானற் சதாசிவ மான
புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி
நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே. 

பொருள் விளக்கம் 
--------------------------
மலங்கள் ஐந்து-ஆணவம், கண்மம், மாயை, சஞ்சிதம், பிரசாத்தம், திலங்கள் ஐந்து – சிவசதாக்கியம், அமூர்த்தி சதாக்கியம்,மூர்த்தி சதாக்கியம், கருத்துரு சதாக்கியம், கன்மத்துரு சதாக்கியம், சதாசிவம் முதலான ஐந்து வேறு மூர்த்தங்களாக இருக்கின்ற சிவப்பரம்பொருள், மனித மனங்களைப் பற்றும் மாய மலங்கள் கெட அருள் செய்தான். பொதுமன்றில் திருநடனமிடும் ந்ந்தியெம் பெருமான் உள்ளத்துள் வந்து விரும்பி இடம் கொண்டமர்ந்து, புலன்கள் வழி உயிர்களைப் பற்றும் இச்சைகளைப் போக்கி அருளினான்.

ENGLISH:
-----------
malaNnkaLaint dhAmena mARRi aruLith
thalaNnkaLain dhAnaR chadhAchiva mAna
pulaNkaLain dhAnap podhuvinuL nandhi
nalaNnkaLainndhAnuL naayandhAn aRindhE.

MEANING
-----------
All impurities we shall expell," said the Lord in Grace
And saying so, from Sadsiva of the Five Spheres came down,
In the sovereign Sabha through His Five Acts Divine,
He broke into my soul's silent depths, Knowing all.