Pages

Friday, January 11, 2013

[hymn 139] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


139
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
பொருள் விளக்கம்
--------------------------------

குருநாதரின் அழகிய திரு உருவைக் கண்டு வணங்குதல் அறிவுக்கு விளக்கமாகும். குருவின் திருப் பெயரைத் தியானித்தல் கூட அறிவு மேம்பட உதவும். குருவின் அருளுரைகளைக் கேட்பது அறிவை விசாலமடையச் செய்யும். இவை எல்லாவற்றையும் விட, அந்த நானாசிரியனின் திரு உருவை நெஞ்சில் நிறுத்தி, அவர் அருளுரைகளை எண்ணியபடியே, நினைவால் தொழுவதும் அறிவின் விளக்கம்- அறிவுக்கு விளக்கம் ஆகும். தெளிவு என்பதற்கு அறிதல், விளக்க முறல் எனப் பல பொருள்கள் உண்டு. திருவருளைப் பெறவும் குருஅருளே துணை செய்யக் கூடுமாதலால், குரு அருளின் பெருமை கூறப்பட்ட்து.
Romanized
-------------
teivu kuruvi tirumēṉi kāṇṭal
teivu kuruvi tirunāmañ ceppal
teivu kuruvi tiruvārttai kēṭṭal
teivu kuruvuru cintittal tāṉē.
Meaning [Guru’s Role in Soul’s illumination]
------------------------------------------------------
It is but to see the Guru’s Holy Form,
It is but to chant the Guru’s Holy Name,
It is but to hear the Guru’s Holy Word,
It is but to muse the Guru’s Holy Being.

Thursday, January 10, 2013

[hymn 138] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


138
திருவடி சிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.
பொருள் விளக்கம்
--------------------------------
ஞானாசிரியனின் இரு பாத கமலங்களே சிவம் என்பதைஅறிந்துணர்ந்தால், அந்தத் திரிவடிகளே சிவலோகம் ஆகும்.ஆழமான அந்தத் திருவடி அருளைச் சிந்தித்தால்,ஆன்மா செல்ல வேண்டிய பாதைக்கு அது வழி வகுக்கும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், அந்த திருவடிகளே தஞ்சமஅடைய வேண்டிய புகழிடமுமாகும் என்பதை உள்ளத் தெளிவுடைய ஞானிகள் உணர்வார்கள். தேரில்- தெளிந்தரிதால். சிந்திக்கில்- எண்ணிப் பார்த்தால். செல்கதி- போகும் வழி. செப்பில்- சொல்ல வேண்டுமானால்.
Romanized
------------
tiruvai civa māvatu tēril
tiruvai yēciva lōkañcin tikkil
tiruvai yēcal katiyatu ceppil
tiruvai yētañcam utei vārkkē.
Meaning-[Lord’s Feet is the Final Refuge of Souls illumed]
-------------------------------------------------------------------------------------
The Holy Feet is Siva if you but know,
The Holy Feet is Siva’s world if you but think,
The Holy Feet is Freedom’s bliss truth to say,
There is the final refuge for souls illumed.

Wednesday, January 9, 2013

[hymn 137] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

 137
அடங்குபேர ண்டத்து அணுஅண்டம் சென்றங்கு
இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே.
பொருள் விளக்கம்
--------------------------------
எல்லா உயிர்களும், உலகங்களும் ஒன்றி அடஙும் பேர்ண்டப் பெருவெளியில், சிவ பரம்பொருளின் அனு அண்டம் இடம் கொண்டுள்ளது. இதுவே நிலைமை. இதில் மாற்றம் இல்லை. எனவே உயிர்களின் உடல்களில் எல்லாம் அடங்கியிரிக்கும் உயிர்கள், தாங்கள் முடிவாக சென்று சேற வேண்டிய இடம் எது என்று எண்ணிப் பார்த்தால், அது இறைவன் திருவடியே என்று தெரியவரும்.கடம்-உடல்.கரை- சேருமிடம்.திடம்-உறுதி.
Romanized             
-------------
aakupēra ṇṭattu auaṇṭam ceṉṟaku
iakoṇṭatu illai ituvaṉṟi vēṟuṇṭō
kaantoum niṉṟa uyirkarai kāṇil
tiampea niṉṟāṉ tiruvai tāṉē.

Meaning-[As Atom Merges in theVast Jiva Merges in Siva]
--------------------------------------------------------------------------------
The tiny atom swimming the Universe vast,
Merges in the Vast no separate existence knows-- ; 
So the Spirit’s plastic stress sweeping through bodies all, 
At sight of His Holy Feet discovers its Ancient Home.