138
திருவடி சிவ மாவது
தேரில்
திருவடி யேசிவ
லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசல்
கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம்
உள்தெளி வார்க்கே.
பொருள்
விளக்கம்
--------------------------------
ஞானாசிரியனின்
இரு பாத கமலங்களே சிவம் என்பதைஅறிந்துணர்ந்தால், அந்தத் திரிவடிகளே சிவலோகம் ஆகும்.ஆழமான
அந்தத் திருவடி அருளைச் சிந்தித்தால்,ஆன்மா செல்ல வேண்டிய பாதைக்கு அது வழி வகுக்கும்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், அந்த திருவடிகளே தஞ்சமஅடைய வேண்டிய புகழிடமுமாகும்
என்பதை உள்ளத் தெளிவுடைய ஞானிகள் உணர்வார்கள். தேரில்- தெளிந்தரிதால். சிந்திக்கில்-
எண்ணிப் பார்த்தால். செல்கதி- போகும் வழி. செப்பில்- சொல்ல வேண்டுமானால்.
Romanized
------------
tiruvaṭi civa māvatu tēril
tiruvaṭi yēciva lōkañcin tikkil
tiruvaṭi yēcal katiyatu ceppil
tiruvaṭi yētañcam uḷteḷi vārkkē.
Meaning-[Lord’s
Feet is the Final Refuge of Souls illumed]
-------------------------------------------------------------------------------------
The Holy Feet
is Siva if you but know,
The Holy Feet
is Siva’s world if you but think,
The Holy Feet
is Freedom’s bliss truth to say,
There is the
final refuge for souls illumed.
No comments:
Post a Comment