Pages

Thursday, December 27, 2012

Daily 1 hymn of Thirumanthiram with Explanation-[hymn-124]


124:
வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவ சித்தர் தாமே.

பொருள் விளக்கம் 
-------------------------
பரவெளியில் பரம்பொருள் பரவிக் கலந்திருப்பதைப் பொலவும், இறைவன் திருவருள் கருணையில், ஆன்மாக்களின் அன்பு அடங்கி ஒடுங்கிக் கிடப்பதைப் பொலவும், சிவப் பரம் பொருளின் பேரொளிப் பிழம்பாகிய சோதியில் ஆன்மாக்களின் உயிரொளி அடங்குவதைப் போலவும் காணப்படுபவர்களே சித்தர்களாவார்கள். சாதாரண மனிதர்களைப் போலத் தோன்றினாலும், வேறாக விளங்கும் மகான்களே சித்தர்கள் என்பது பொருள். வெளி – பரவெளி, அளி – கருணை, அன்பு, ஒளி – சோதி, சுடர். தெளியும் – தெரியும்.

Romanized
-------------
veḷiyil veḷipōy viraviya vāṟum
aḷiyil aḷipōy aṭaṅkiya vāṟum
oḷiyil oḷipōy oṭuṅkiya vāṟum
teḷiyum avarē civa cittar tāmē.

MEANING-[Who Are the Siva-Siddhas ]
---------------------------------------------
Space intermingling with space,
Nectar drowning in nectar,
Light dissolving in light--
The elect are they, the Siva-Siddhas,
Who these splendid visions perceive.

Wednesday, December 26, 2012

Daily 1 hymn of Thirumanthiram with Explanation-[hymn-123]

123:
உலகெங்கும் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான் போன்பத்து அருள்வெளி தானே.

பொருள் விளக்கம்
-----------------
சிவபெருமான் உலகமெல்லாம் பரவ, எங்கும் பரந்து றைந்திருக்கிற உண்மையை நானறிய அருளிச் செய்தான். தேவர்களும் அறியாத பேரின்ப வீட்டுலகை நானறிய அருளினான். தில்லை அம்பலத்துள், சித்தாகாசமாகிய பேரின்பப் பெருவெளியில் ஆனந்தக் கூத்திடும் ஐயன் எனக்கு அவன் திருவடித் துணை அருளினான். பேரின்பப் பெருவெளியில் அவன் அருள் வெள்ளத்தை நான் ஆழ அமிழ்ந்து அள்ளிப் பருகி ஆனந்திக்கவும் அருளிச் செய்தான். மன்று - நடன சபை.

Romanized
------------
ulakeṅkum tāṉāṉa uṇmai
aḷittāṉ amarar aṟiyā ulakam
aḷittāṉ tirumaṉṟuḷ āṭun tiruttāḷ
aḷittāṉ pōṉpattu aruḷveḷi tāṉē.

MEANING-[He Granted Me Bliss Supreme ]
---------------------------------------------
He made me see the truth that He pervades all,
Granted me the vision of the world that even Devas know not,
The vision of the Sacred Feet in Holy Sabha's cosmic dance,
Granted me His infinite Grace and the Bliss supreme.

Tuesday, December 25, 2012

Daily 1 hymn of Thirumanthiram with Explanation-[hymn-122]

122:
சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகஞ் சாராது அவன்பதி போக
நவயோக நந்தி நமக்களித் தானே.

பொருள் விளக்கம்
----------------------------
சிவயொகம் என்றால் என்ன? முன் பாடலில் சிவயொகிகள் செத்தவர்கள் பொலிருப்பர் என்று சொன்ன திருமூலர், இப்பாடலில் சிவயோகம் என்றால் என்ன என்பதை விளக்குகிறார். சிவயோகமாவது - சித்து, அசித்து என்னும் உயிர்ப் பொருள். ஜடப் பொருள் என்னும் இரண்டொடும் தனக்குள்ள தொடர்பை அறுத்துக் கொண்டு ( தவ - விடுபட்டு ) யோக நிட்டையில் தன் உள்ளொளியும் (தன் ஒளி) தன் உயிர் உணர்வும் ஒன்றாய் (தானாய்) பிறப்பு இறப்புகளுக்குக் காரணமான, வேறு வழிச் செல்லாமல் (அவயோகம்). இறைவன் திருவடிப் பேற்றினை (அவன் பதி) அடைதல். இது நவயொகம். நல்ல வழி. இதை நந்தி எம்பெருமான் நமக்கருளினான், நவ யோகம்மாவது - ஆத்ம பூசை, உள்ளத்துள் உள்ள இறைவனை உணர்வொன்றி வழிபடுதல். அவம் - கேடு.

Romanized
------------------
civayōka māvatu cittacit teṉṟu
tavayōkat tuḷpukkut taṉṉoḷi tāṉāy
avayōkañ cārātu avaṉpati pōka
navayōka nanti namakkaḷit tāṉē.

MEANING-[Sivayoga is to Attain Self-Lumination ]
---------------------------------------------------------------------------------
Sivayoga it is to know the Cit-Acit,
And for the Yoga-Penance qualify;
Self-light becoming Self,
To enter undeviating, His lordly domain;
He granted me this--Nandi of the Nine Yogas.