Pages

Tuesday, January 15, 2013

[hymn 143] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


143: மெண்ணொன்று கண்டீர் இருவைகப் பதாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டமெண் ணானார்ப்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.
பொருள் விளக்கம்
------------------------------
மண் ஒன்று- ஒரே தன்மையுடைய மண். மண் ஒன்றுதான். அதனாலான கலயங்கள்(பாத்திரங்கள்) இரண்டு. ஒரு பாத்திரன் தீயினால் சுடப்பட்ட்தால் உறுதி உடையதாக இருந்தது(திண்மை-உறுதி). இன்னொரு பாத்திரம் பச்சை மண். சுடப்படாதிருந்த்து. அது மழை பெய்து தண்ணீரில் நனைந்தவுடன், கரைந்து மீண்டும் களி மண்ணோடு மண்ணாக்க் கலந்து விட்டது. இது போலத்தான் உலக மக்கள் பலரும் உள்ளனர்.தீயால் மண்ணாக் கலந்து விட்டது. தீயால் மண்கலம் திடப்படும். தீயிடப்படா பச்சை மண் கலம நீரில் கரையும். எனவே இறையருளை உயிர்கள் உறுதுணையாக்க் கொள்ள வேண்டும் என்பது குறிப்பு.
Romanized
--------------
meṇṇoṉṟu kaṇṭīr iruvaikap patāttiram
tiṇṇeṉṟu iruntatu tīviaic cērntatu
viṇṇiṉṟu nīrvii mīṇṭame ṇāṉārppōl
eṇṇiṉṟi māntar iakkiṉṟa vāṟē.
Meaning-[Dust Into Dust That is Body’s Way]
------------------------------------------------------------
The Vessel’s clay was one but of two Karmas made,
Firm set until Fate its grim summons gave;
Then the rains poured and back to clay the vessel turned;
Thus countless hordes perish and pass to the grave.

Monday, January 14, 2013

[hymn 142] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


142: 
போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணியர் ஆயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேதந் துதித்திடப் போடைந்தார் விண்ணே.


பொருள் விளக்கம்
--------------------------------

போதம் என்ற சொல்லுக்கு அறிவு, ஞானம், உபதேசம் என்று பல பொருள்கள் உண்டு.சிவஞான போதம் என்றும் சிலர் சொல்லுவர். மெய்ஞ்ஞான அறிவை உபதேசித்த எங்கள் புண்ணியரான நந்தி யெம்பெருமானை, அவரது உபதேசங்களை அறிவால் உணர்ந்து தியானித்துப் புண்ணியவாண்களானவர்கள்; சிவபெருமானின் திருநடனம் கண்டு களித்துப் பெற்ற பேரின்பப் பெருக்கால், கண்கள் பெற்ற பயன் பெற்று, வேதநூல்கள் எல்லாம் வணங்கிப் பணந்து பாடும் பரம்பொருளின் விண்ணுலக வாழ்வு பெற்றவராயினர். நாதன்- தலைவன். நடம்- நடனம். நயனம்- கண்கள். களிகூர- இன்பம் அடைய.
Romanized
---------
pōtan tarumeka puṇṇiya nantiyaip
pōtan tailvaittup puṇṇiyar āyiṉār
nāta naattāl nayaa kaikūra
vētan tutittiap pōyaaintār viṇṇē.
Meaning [Thus They Reached Heaven]
--------------------------------------------------------
Who in their minds kept our Nandi's Holy Name,
Nandi Wisdom's Lord they holy became,
As the Lord danced they beheld Him with eyes enthralled-----
While the Vedas sang in praise,
Reached Heaven’s sacred shores.

Sunday, January 13, 2013

[hymn 141] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


141:
சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்ன் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.

பொருள் விளக்கம்
---------------------------------
நந்தி-ஞானப் பரஞ்சுடர்.பரம்பொருள். கண்கள் கண்டு களிக்க வேண்டியவை(சந்திப்பது) இறைவன் திருவடிகளே. மனம் பார்த்து மகிழ வேண்டியது அந்தச் சிவப் பரம்பொருளின் செம்பொன் திருமேனியையே. வாழ்த்தி வணங்கி வழிபடத் தக்கது ந்ந்திப் பெருமானின் திருப்பெயரே. அறிவில்- உள்ளத்தில், கொள்ளத் தக்கது- கொண்டொழுகத் தக்கது நந்தி எம்பெருமானின் உபதேச மொழிகளையே- அருளுரைகளையே. வந்திப்பது- போற்றிப் புகழுதல். போதம்- உபதேசம். நெஞ்சிலும் நினைவிலும் நிற்க வேண்டியது- நிலைக்க வேண்டியது பரம்பொருள் சிந்தனை மட்டுமே என்பது பாடலின் பொருள்.

Romanized
-------------
cantip patunanti tatirut tāḷiai
cintip patunanti ceyya tirumēṉi
vantip patunanti nāmame vāymaiyāl
puntikku nipatu nantipo pōtamē.

Meaning-[Fill Thy Thoughts With Nandi]
--------------------------------------------------
 All they see is Nandi's Holy Feet twain
All they think is Nandi's Holy Form divine
All they chant is Nandi’s Name I throw,
In all their thoughts Nandi s golden Words and wise.