136
அப்பினில் கூர்மை
ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப்
பேர்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு
மாறுபோல்
செப்பினிற்
சீவன் சிவத்துள் அடங்குமே.
பொருள்
விளக்கம்
-----------------------------
அப்பு- கடல் நீர்.
கூர்மை- உப்புத் தன்மை. ஆதித்தந் சூரியன். வெம்மையால்- வெப்பத்தால். கடல் நீரில் கலந்திருக்கின்ற
உப்பு, உப்பளங்களில், சூரிய வெப்பத்தால், நீரில் ஆவியாகக் காய்ந்தவுடன், உப்பாக படிந்து
நிற்க்கும். இப்படி படிந்துள்ள உப்பை எடுத்து, அதில் ஓர் உருவம் செய்து, தண்ணீரில்
விட்டால், அந்த உப்பு உருவம் கரைந்து, உப்பு வேறு, நீர் வேறாகத் தோன்றாதபடி, தண்ணீரோடு
இரண்டறக் கலந்து விடும்.இதைப்போல சீவன் சிவத்தோடு கலந்து, சிவனுள் அடங்கி விடும்.உப்பும்
தண்ணீரும் போலச் சீவனும் சிவனும் இரண்டறக் கலக்க வேண்டும் என்பது பொருள். செப்பினில்
சீவன் என்றது, உடம்பாகிய செப்பின் உள்ளிருக்கிம் உயிரை.
Romanized
--------------
appiṉil kūrmai ātittaṉ vemmaiyāl
uppeṉap pērpeṟṟu urucceyta avvuru
appiṉiṟ kūṭiya toṉṟāku māṟupōl
ceppiṉiṟ cīvaṉ civattuḷ aṭaṅkumē.
Meaning-[Jiva
Lies Enclosed in Siva]
-----------------------------------------------------------
The fierce
rays of the sun beating upon the water,
The
incontained salt does in crystal shapes emerge;
Even as that
salt is in the water contained,
So does Jiva
in Siva lie enclosed.
No comments:
Post a Comment