Pages

Wednesday, December 5, 2012

S.No: 0014 (verse 66-70)

66: அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே.

Life takes its birth, stands preserved awhile,
And then its departure takes; caught
In that momentary wave of flux, Him we glimpse,
The Lord who in Tamil sweet and northern tongue
Life's mystery revealed.

4 குரு பாரம்பரியம் THE GURU HIERARCHY
------------------------------------------------------

67: நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே.

Seekest thou the Masters who Nandi's grace received
First the Nandis Four, Sivayoga the Holy next;
Patanjali, then, who in Sabha's holy precincts worshipt,
Vyaghra and I complete the number Eight.

68: நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.

By Nandi's Grace I, His Masters elect,
By Nandi's Grace I Primal First sought;
By Nandi's Grace, what can I perform not?
Nandi guiding, I here below remained.

69: மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே.

By merit of instruction imparting,
Malangan, Indiran, Soman and Brahman,
Rudran, Kalangi and Kancha-malayan,
These seven in my line successive come.

70: நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

The Four, each in his corner, as Master ruled,
The Four, each his diverse treasure held,
Each in his turn spoke, "Take all I've;"
And thus, Immortals and Masters became.

No comments:

Post a Comment