Pages

Sunday, November 25, 2012

S.No: 0005 (verse 21-25)

21: வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தனம்
கோனைப் புகழுமின் கூடலு மாமே.

Sing His praise! Oh how quick He comes!

He, the Lord, who in one fell sweep the wild elephant slashed,
The Lord who ends this muddy vesture's mortal coil,
Of the Heavenly Hosts, of Brahma Divine,
Of Mal, hued like the clouds rain-borne.

22: மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்
நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்
எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே.

This Lord of Maya-land that has its rise in the mind,
He, the Being without thought, knows yet all our thoughts;
Some be who groan,"God is not to me a friend;"
But, sure, God seeks those who seek their souls to save.

23: வல்லவன் வன்னிககு இறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே.

The Mighty Lord, the God of Fire, set amidst the seas,
Whom the comprehending souls never deny;
He, the Lord of the Heavenly Beings all,
Who , day and night, pours forth His Divine Grace.

24: போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி
தேற்றுமின் என்றும் சிவனடிக் கேசெல்வம்
ஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.

Sing His praise, Sing of His Holy Feet!
Pour all your treasures at Siva'a Sacred Feet!
And they who shake off the clouded eye and disturbed mind,
With them He ever stood, benignantly firm.

25: பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.

The Birthless is He, the Divine Mad, of Compassion vast,
The Deathless is He, the Boundless One, Granter of Joys all,
To Him kneel, and, kneeling, shall find
Naught becomes Maya, the bond immemorial.

No comments:

Post a Comment