Pages

Monday, December 31, 2012

[hymn-128]-Daily 1 hymn of Thirumanthiram with Explanation


128
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கியடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்
சோம்பர் கண்டார் அச்சுருதிக்கண் தூக்கமே.

பொருள் விளக்கம்
---------------------------------
செயலற்றவர்கள் இருக்குமிடம், தாயுமானவர் பாடியபடி, சிந்தை அடக்கியே சும்ம இருப்பவர்கள் இருக்குமிடம்- தூய பரவெளியாகிய சிவ வெளியிலே அவர்கள் செயலற்றுச் சிந்தையை அடக்கிச் சும்மா கிடப்பதும், அந்தத் தூயதான பரவெளியிலேயே ஆகும். இவர்கள் உணர்வுகள் ஒன்றி இருப்பதும் வேத முடிவான சிவ பெருமான் திருவடிகலேயே. இப்படி செயலற்று நிற்கும் சித்தர்கள்(சோம்பர்) வேதம் ஓதும் விமலனை எண்ணியே யோக நித்திரையும், இன்பத்துயிலும் கண்டனர். சுருதி- வேதம். தூக்கம்- யோக நித்திரை, இன்பத் துயில். சித்தர்கள் தம்மை மறந்து பரவெளியிலேயே இருப்பர், கிடப்பர், உணர்வர், உறங்குனவர் எனபதாம்.இது யோக நிலை. சமாதி அனுபவம்.

Romanized
---------------
cōmpar iruppatu cutta veiyilē
cōmpar kiyaappatum cutta veiyilē
cōmpar uarvu curuti muinti
cōmpar kaṇṭār accurutikka tūkkamē.

MEANING-[Nature of Divine Impassivity]
-----------------------------
Nature of Divine Impassivity
In space pure is Impassivity seated
In space pure It does repose
Impassivity begins where Vedas end
Who Impassivity saw inside Vedas they slept

Sunday, December 30, 2012

[hymn-127]-Daily 1 hymn of Thirumanthiram with Explanation

127
சிவமாகிய எங்குந் தாமாகிய
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கிய
இருந்தார் முக்காலைத்து இயல்பைதக் குறித்தங்கு
இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே.

பொருள் விளக்கம்:
-------------------------
சித்தத்துள்ளே சிவனைக் காண்பதே பிறவிப் பயன் என்று இருந்த சித்தர் பெருமக்கள், சிவசொரூபமாகி (சிவம் ஆகி) எங்கும் – காணும் இடமெல்லாம் காணப்படுபவர்கள் தாங்களே ஆகி, எங்கும் நிறைந்திருந்தனர். நடப்பவை யெல்லாம் சிவன் செயல் என்று கண்டுணர்ந்தனர்(நோக்கி). நிகழ்காலம் எதிர்காலம் இறந்தகாலம் என்னும் முக்காலங்களின் இயல்பையும் அறிந்து, நான் எனது என்னும் செருக்கொழிந்து (இழிவு எய்திச்) செயலற்றிருந்தனர். சோம்பு- செயலற்றிருத்தல். அருணகிரியார் சொன்ன “ சும்மா இரு சொல் அற”. என்ற நிலை இதுவே.

Romanized
-------------
civamākiya ekun tāmākiya
iruntār civaceyal yāvaiyum nōkkiya
iruntār mukkālaittu iyalpaitak kuittaku
iruntār iavuvantu eytiya cōmpē.


MEANING-[Siddhas Lose Themselves in Divine Impassivity ]
---------------------------------------------
-->

In Siva they remained seeing themselves in all
Remained thus mutely gazing at Siva s works manifold
In silence witnessing Time s three tenses
They remained lost
While Divine Impassivity spread its sable wings.

Saturday, December 29, 2012

[hymn-126]-Daily 1 hymn of Thirumanthiram with Explanation

126: 
ஆறும் பதடிமுத்தி ஏணியாய்
ஒப்பில்லா ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்பத அரிய சிவங்கண்ட தான்தெளிந்து
அப்பதரி சாக அமெர்ந்திருந் தாரே. 

பொருள் விளக்கம்:
-------------------------
 படி- ஏறும் படி. முத்தி- பேரின்ப வீடு.ஏணி- மேல் ஏற உதவுது. முப்பதும் ஆறும்- முப்பதாறு. முப்பதாறு தத்துவங்கள். அவை- ஆன்ம தத்துவம்-24, வித்தியா தத்துவம்-7, சிவ தத்துவம்-5 என முப்பத்தாறு. தத்துவம் என்பதற்குப் பொருள் இறைவனை அடைய உதவும் வழி. இந்த முப்பதாறு வழிகளையும் ஏணிப் படிகளாகக் கொண்டு, மேலேறி(மூலாதாரத்தை அடைந்து) ஆங்கே ஒப்புவமை இல்லாத இறைவனின் ஆனந்த தாண்டவம் தன் உள்ளத்தில் ஒளி வெள்ளமாய்ப் பரவி நிற்க, அந்த ஒளி வெள்ளத்தில் சொல்லுதற்கு இயலாத(செப்பரிய) பெருமை உடைய சிவப்பரம் பொருளைக் கண்டு, அத்வே மெய்ப்பொருள் எனத் தெரிந்து(தெளிந்து) அந்தத் தெளிந்த ஞான நிலையே பிறவிப் பயன் என்று இருந்தவர்கள் ஞானிகள்.


Romanized
-------------
āṟum pataṭimutti ēṇiyāy
oppilaa āṉaintat tuḷḷoḷi pukkuc
ceppata ariya civaṅkaṇṭa tāṉteḷintu
appatari cāka amerntirun tārē.

MEANING-[They Walk Into Light of Siva ]
---------------------------------------------
Ascending thus the steps,
Thirty and six of Freedom's ladder high,
Into the peerless Light of Bliss they walked;
And Siva, the inexplicable, they saw--
Having seen, realized and so stayed.

Friday, December 28, 2012

[hymn-125]-Daily 1 hymn of Thirumanthiram with Explanation

125:
சிவலோகம் இங்கே தரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவுந்தம் முள்கொண்டோ ர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே.
பொருள் விளக்கம் 
-------------------------
மகான்கலாகிய சித்தர்கள் இங்கே இவ்வுலகிலேயே இந்தப் பிறவியிலேயே சிவலோகக் காட்சி கண்டு களித்தவர்கள். ஓசை(சத்தம்) ஓசை ஒடுங்கும்(முடிவும்) கால முடிவும், தம் மனக்கண் முன் கண்டு கொண்டவர்கள் அவர்கள், அழிவற்றவர்கள்(நித்தர்) அவர்கள். பந்த பாசம் என்னும் வினை அழுக்கு(நிமலர்) அண்டாதவர்கள் அவர்கள். நோய் நொடி (நிராமயம்) அவர்கள் சித்தர்கள். அவர்கள் தத்துவம் முப்பதாறும் கடந்த ஜீவன் முக்தர்கள்.

Romanized
-------------
civalōkam iṅkē taricittōr
cattamum catta muṭivuntam muḷkoṇṭō r
nittar nimalar nirāmayar nīḷpara
muttartam mutti mutalmuppat tāṟē.

MEANING-[Siddhas Ascend the Thirty Six Tattvas ]
---------------------------------------------
Siddhas they that Siva’s world here visioned,

Nada and Nadanta deep in them realized
The Eternal ,the Pure ,reposing in Bliss unalloyed--
Thirty and Sixthe steps to Liberation leading

Thursday, December 27, 2012

Daily 1 hymn of Thirumanthiram with Explanation-[hymn-124]


124:
வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவ சித்தர் தாமே.

பொருள் விளக்கம் 
-------------------------
பரவெளியில் பரம்பொருள் பரவிக் கலந்திருப்பதைப் பொலவும், இறைவன் திருவருள் கருணையில், ஆன்மாக்களின் அன்பு அடங்கி ஒடுங்கிக் கிடப்பதைப் பொலவும், சிவப் பரம் பொருளின் பேரொளிப் பிழம்பாகிய சோதியில் ஆன்மாக்களின் உயிரொளி அடங்குவதைப் போலவும் காணப்படுபவர்களே சித்தர்களாவார்கள். சாதாரண மனிதர்களைப் போலத் தோன்றினாலும், வேறாக விளங்கும் மகான்களே சித்தர்கள் என்பது பொருள். வெளி – பரவெளி, அளி – கருணை, அன்பு, ஒளி – சோதி, சுடர். தெளியும் – தெரியும்.

Romanized
-------------
veḷiyil veḷipōy viraviya vāṟum
aḷiyil aḷipōy aṭaṅkiya vāṟum
oḷiyil oḷipōy oṭuṅkiya vāṟum
teḷiyum avarē civa cittar tāmē.

MEANING-[Who Are the Siva-Siddhas ]
---------------------------------------------
Space intermingling with space,
Nectar drowning in nectar,
Light dissolving in light--
The elect are they, the Siva-Siddhas,
Who these splendid visions perceive.

Wednesday, December 26, 2012

Daily 1 hymn of Thirumanthiram with Explanation-[hymn-123]

123:
உலகெங்கும் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான் போன்பத்து அருள்வெளி தானே.

பொருள் விளக்கம்
-----------------
சிவபெருமான் உலகமெல்லாம் பரவ, எங்கும் பரந்து றைந்திருக்கிற உண்மையை நானறிய அருளிச் செய்தான். தேவர்களும் அறியாத பேரின்ப வீட்டுலகை நானறிய அருளினான். தில்லை அம்பலத்துள், சித்தாகாசமாகிய பேரின்பப் பெருவெளியில் ஆனந்தக் கூத்திடும் ஐயன் எனக்கு அவன் திருவடித் துணை அருளினான். பேரின்பப் பெருவெளியில் அவன் அருள் வெள்ளத்தை நான் ஆழ அமிழ்ந்து அள்ளிப் பருகி ஆனந்திக்கவும் அருளிச் செய்தான். மன்று - நடன சபை.

Romanized
------------
ulakeṅkum tāṉāṉa uṇmai
aḷittāṉ amarar aṟiyā ulakam
aḷittāṉ tirumaṉṟuḷ āṭun tiruttāḷ
aḷittāṉ pōṉpattu aruḷveḷi tāṉē.

MEANING-[He Granted Me Bliss Supreme ]
---------------------------------------------
He made me see the truth that He pervades all,
Granted me the vision of the world that even Devas know not,
The vision of the Sacred Feet in Holy Sabha's cosmic dance,
Granted me His infinite Grace and the Bliss supreme.

Tuesday, December 25, 2012

Daily 1 hymn of Thirumanthiram with Explanation-[hymn-122]

122:
சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகஞ் சாராது அவன்பதி போக
நவயோக நந்தி நமக்களித் தானே.

பொருள் விளக்கம்
----------------------------
சிவயொகம் என்றால் என்ன? முன் பாடலில் சிவயொகிகள் செத்தவர்கள் பொலிருப்பர் என்று சொன்ன திருமூலர், இப்பாடலில் சிவயோகம் என்றால் என்ன என்பதை விளக்குகிறார். சிவயோகமாவது - சித்து, அசித்து என்னும் உயிர்ப் பொருள். ஜடப் பொருள் என்னும் இரண்டொடும் தனக்குள்ள தொடர்பை அறுத்துக் கொண்டு ( தவ - விடுபட்டு ) யோக நிட்டையில் தன் உள்ளொளியும் (தன் ஒளி) தன் உயிர் உணர்வும் ஒன்றாய் (தானாய்) பிறப்பு இறப்புகளுக்குக் காரணமான, வேறு வழிச் செல்லாமல் (அவயோகம்). இறைவன் திருவடிப் பேற்றினை (அவன் பதி) அடைதல். இது நவயொகம். நல்ல வழி. இதை நந்தி எம்பெருமான் நமக்கருளினான், நவ யோகம்மாவது - ஆத்ம பூசை, உள்ளத்துள் உள்ள இறைவனை உணர்வொன்றி வழிபடுதல். அவம் - கேடு.

Romanized
------------------
civayōka māvatu cittacit teṉṟu
tavayōkat tuḷpukkut taṉṉoḷi tāṉāy
avayōkañ cārātu avaṉpati pōka
navayōka nanti namakkaḷit tāṉē.

MEANING-[Sivayoga is to Attain Self-Lumination ]
---------------------------------------------------------------------------------
Sivayoga it is to know the Cit-Acit,
And for the Yoga-Penance qualify;
Self-light becoming Self,
To enter undeviating, His lordly domain;
He granted me this--Nandi of the Nine Yogas.

Monday, December 24, 2012

Daily 1 hymn of Thirumanthiram with Explanation-[hymn-121]

121: வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே.

பொருள் விளக்கம்
-----------------
வித்து - விதை. இங்கே பிறவிகள் தொடர்வதற்கான வினைப் பயன்கள், பிறவித்துயருக்குக் காரணமான பாசப் பிணைப்புகளை விட்டு விட்டு, குரு உபதேசமாகச் சொன்ன மந்திர மொழியை மனதுள் சொல்லச் சொல்லச், மேலான தன்னை மறந்த யோக நிலை சித்திக்கும், அந்த நிலை பிறவித் தொடர் அறுக்கும் புனித நிலை, இந்த நிலை அடைந்தவர்கள், உடலொடும் உயிரோடும் ஐம்புல அறிவும் ஒன்றாகிச் செத்தவர்களைப் போல இருப்பார்கள். இவர்களே சிவயோகிகள் எனப்படுவர். வியாக்கிரதம் - உபதேசம், துரியம்-தன்னை மறக்கும் யோக நிலை, துடக்கறச்-தொடக்கம், தோற்றம் அழிய, செத்திட்டு - உலகப் பற்றற்று.

Romanized
----------
vittaik keṭuttu viyākkirat tēmikac
cuttat turiyam piṟantu tuṭakkaṟa
ottup pulaṉuyir oṉṟāy uṭampoṭu
cettiṭ ṭiruppār civayōki yārkaḷē.

MEANING-[Sivayogins Attain Turiya State in Mortal Body]
---------------------------------------------------------
Sivayogins are they that the seed destroy,
Who, in waking state, the pure awareness induce;
Who in harmony unbroken, achieve the tranced breath,
When life, senses, body--alike simulate death.

Sunday, December 23, 2012

Daily 1 hymn of Thirumanthiram with Explanation-[hymn-120]


120:
ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே.

பொருள் விளக்கம்
--------------------------
ஆ- பசு, மேவு - மேவிய. இங்கு தருகின்ற எனப் பொருள் கொள்ளலாம். பசுவின் பாலை நீரோடு கலந்து வைத்தால் அன்னப் பறவையானது பாலையும் நீரையும் வேறு வேறாக்கி, அதாவது, நீரை விட்டுவிட்டுப் பாலை மட்டும் பருகும் என்பர். இதுபொல இறைவன் அவனே. சிட்றம்பலம், பேரம்பலம், பொன்னம்பலம் என்ற அம்பலங்களில் ஆனந்தக் கூத்தை நிகழ்த்துவதொடு, ஆன்மாக்கள் உயிரோடும் ஒன்றியிருக்கின்றான். என்றாலும், இந்த ஆன்மா அழுக்க்டைய (மலம் சேர), தீமையான (தீமேவு) பலவகைக் காரணங்கள் (பல் கரணங்கள்) ஆன்மாக்களைச் சேருகேன்றண (உற்றன). இவையே உயிர்கள் தொடரும் ஏழ்பிறவிக்கும் காரணம் ஆகின்றன. இறைவன் அருள் இருந்தால் போதும், பிரவித் துயருக்குக் காரணமான் மல்ங்கள் வினைத் தொடர்புகள், நெருப்புப் பற்றிய விதை (வித்து) போலக் கரிந்து போகும். மரத்துக்கு மூலம் விதை. எனவே வினைத் தொடர்பை ‘வித்து’ என்றார்.

ENGLISH
----------
AmEvu pAlnIr pirikkinRa annampOl
thAmE thanimanRil thannan thaniniththan
thImEvu palkara NaNkaLuL uRRana
thAmEz piRapperi chArn^dhavith thAmE

MEANING
-----------
Like unto the swan that from milk the water parts,
So the Lord, Himself, alone, in this Sabha unique,
Grasped the senses many that scorch like fire,
And thus the Seven Births unto roasted seeds rendered.

Saturday, December 22, 2012

Daily 1 hymn of Thirumanthiram with Explanation-[hymn-119]

119.
அறிவுஐம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல
அறிவுஅறி வுள்ளே அழிந்தது போலக்
குறியறி விப்பான் குருபர னாமே. 

பொருள் விளக்கம்

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வாயிலாக, உண்டு, உணர்ந்து, நுகர்ந்து, கேட்டு, கண்டு மகிழ்வதான செயல்களில் ஈடுபட்டுச் சென்று செரும் வழி தெரியாமல், ஆழங்காண முடியாத பிறவிக் கடலில் மூழ்கி, மனித அறிவானது ஆழிகின்றபோது, ஆன்மாக்களுக்கு நல் வழிகாட்டி அருளுபவன் ஞானாசிரியனான சிவபெருமானே ஆவான். நான்றதாகி-தொடர்புடையதாகி. நெறி-வழி, குறி - குறிகோள்.

ENGLISH

aRivaim pulanuDa nEnAn RadhAki
neRiyaRi yAdhuRRa nIrAzam pOla
aRivaRi vuLLE azindhadhu pOlak
kuRiyaRi vippAn kurupara nAmE

MEANING
He Made Sensory Consciousness Merge in God Consciousness
Consciousness hanging on to the senses five,
Knowing not its course as on deep waters drifting,--
Consciousness sensory merging in the Consciousness deep,--
Thus He pointed the Way,--He, the Guru Supreme.

Friday, December 21, 2012

Daily 1 hymn of Thirumanthiram with Explanation-[hymn-118]

118: 
மலங்கள்ஐந் தாமென மாற்றி அருளித்
தலங்கள்ஐந் தானற் சதாசிவ மான
புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி
நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே. 

பொருள் விளக்கம் 
--------------------------
மலங்கள் ஐந்து-ஆணவம், கண்மம், மாயை, சஞ்சிதம், பிரசாத்தம், திலங்கள் ஐந்து – சிவசதாக்கியம், அமூர்த்தி சதாக்கியம்,மூர்த்தி சதாக்கியம், கருத்துரு சதாக்கியம், கன்மத்துரு சதாக்கியம், சதாசிவம் முதலான ஐந்து வேறு மூர்த்தங்களாக இருக்கின்ற சிவப்பரம்பொருள், மனித மனங்களைப் பற்றும் மாய மலங்கள் கெட அருள் செய்தான். பொதுமன்றில் திருநடனமிடும் ந்ந்தியெம் பெருமான் உள்ளத்துள் வந்து விரும்பி இடம் கொண்டமர்ந்து, புலன்கள் வழி உயிர்களைப் பற்றும் இச்சைகளைப் போக்கி அருளினான்.

ENGLISH:
-----------
malaNnkaLaint dhAmena mARRi aruLith
thalaNnkaLain dhAnaR chadhAchiva mAna
pulaNkaLain dhAnap podhuvinuL nandhi
nalaNnkaLainndhAnuL naayandhAn aRindhE.

MEANING
-----------
All impurities we shall expell," said the Lord in Grace
And saying so, from Sadsiva of the Five Spheres came down,
In the sovereign Sabha through His Five Acts Divine,
He broke into my soul's silent depths, Knowing all.

Thursday, December 20, 2012

Daily 1 hymn of Thirumanthiram with Explanation-[hymn-117]


117.
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரிய சந்நிதி யிற்சுடு மாறுபோல்
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே

பொருள் விளக்கம்
சூரிய ஒளியில் சூரிய காந்தக் கல் முன் வைத்த பஞ்சு பற்றி எறிவதைப் போல, வெறும் சூரிய காந்திக் கல்முன் பஞ்சை வைத்தான். அது எரியாது, அதாவது, பஞ்சு பற்றிக் கொள்ள முக்கியத் தேவை சூரிய ஒளி, சூரிய ஒளியிருந்தால் தான் அது சூரிய காந்தக் கல்லில் பட்டு வெப்பத்தை மிகச் செய்து பஞ்சைப் பற்றி எரியச் செய்யும். சூரிய ஒளி இல்லாமல் சூரிய காந்திக் கல் பஞ்சைப் பற்ற வைக்காது. அதுபோல் , அதாவது சூரியன் முன் சூரிய காந்திக் கல் பஞ்சைச் சுடுவது போல, ஞானாசிரியன் முன் தோன்றிய மாணவனின் மன மயக்கங்கள் அழிந்து போகும். ஆண்டவன் அருட்பார்வை உயிர்களின் அக இருளைப் போக்கும் என்பது பொருள். சூரியகாந்தம் என்பது சூரிய வெப்பத்தை மிகச் செய்யும் ஒரு கல்.

ENGLISH:
chUriya kANdhamum chUzhpanYchum pOlavE
chUriya kANdham chUzhpanYchaich chuttitA
chUriya chaNNithi yiRchutu mARupOl
chUriyan thORRamun aRRa malanGkaLE

MEANING:
Like the spark that within the bamboo indwells,
So, Nandi Lord, from this body-temple flamed;
With sweet compassion gentler than a mother's,
He shattered the Impurities Three
And like unto the sun on the ocean of mercy arose.

Wednesday, December 19, 2012

Daily 1 hymn of Thirumanthiram with Explanation-[hymn-116]



116.
வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயி லிருந்து குடிகொண்ட கோன் நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய் எழுஞ் சூரிய னாமே.

பொருள் விளக்கம்:
காட்டில் மூங்கில் வெறும் மரமாகதான் உள்ளது. ஆனால், அந்த மூங்கில் ஒன்றோடொன்று உரசுகிறபோது அதிலிரின்து நெருப்பு வெளிப்படுகிறது. மூங்கில் உள்ளிருக்கும் நெருப்புப்பொல, இந்த உடம்பாகிய கோயிலுக்குள்ளே இறைவனாகிய நந்தி- ஆன்மாக்களின் தலைவன் கோயிலுக்குள்ளே எழுந்தருளியுள்ளான். தாயைக் காட்டிலும் மிகுந்த பாசம் உடையவன் அவன். ஆணவம், மாயை என்னும் மன அழுக்குகள் மூன்றையும் கழுவி அகற்ற, அருளை வெள்ளமெனப் பொழிந்து, உள்ளதுள்ளே பேரொளிப் பிழம்பாகத் தோன்றி எழும் ஞான சூரியன் அவனே.

English:
vEyin ezhunGkanal pOlEim meyyenum
kOyi liruNdhu kudikonNta kOn NaNdhi
thAyinum mummalam mARRith thayAennum
thOyama dhaay ezhunY chUriya nAmE.

Meaning:
Like the spark that within the bamboo indwells,
So, Nandi Lord, from this body-temple flamed;
With sweet compassion gentler than a mother's,
He shattered the Impurities Three And
 like unto the sun on the ocean of mercy arose.

Tuesday, December 18, 2012

Daily 1 hymn of Thirumanthiram with Explanation-[hymn-115]



115.
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசுபாசம்
பதியணு கில் பசுபாசம் நிலாவே.
பொருள் விளக்கம்:
பதி,பசு,பாசம் என்று சொல்லப்படும் மூன்றுள், இறைவனைப் போலவே, அவன் படைத்த உயிர்களும், அவற்றைப் பற்றியிருக்கும் பந்த பாசங்களும், மிகப் பழைமையானவை (அனாதி-பழைமை)- தலைவனாகிய இறைவனை ஆன்மாக்கள் (பசு) அனுகுவதில்லை, நெருங்குவதில்லை. காரணம், அவற்றைப் பற்றியுள்ள பந்தங்கள்-பாசங்கள். ஆனால் இந்த ஆன்மாக்கள் தலைவனாகிய பதியை நெருங்கினால், அவற்றை பிடித்த பாசம் நிற்காது.விலகிப் போகும்.பதியை நாடப் பாசம் விலகும் என்பது பொருள்.
ENGLISH
padhipachu pAcham enappakar mUnRil
padhiyinaip pOlpachu pAcham anAdhi
padhiyinaich chenRu anNukAp pachupAcham
padhiyanNu kil pachupAcham NilaavE.
MEANING
They speak of the Three--Pati, Pasu and Pasa;
Beginningless as Pati, Pasu and Pasa are:
But the Pasu-Pasa nears not the Pati supreme:
Let but Pati touch! the Pasu-Pasa is as naught.