Pages

Wednesday, December 12, 2012

S.No: 0019 (verse 91-95)


91: விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பில் கயிலை வழியில்வந் தேனே.

Thus expounding I bore His Word
Down Kailas's unchanging path,
The Word of Him, the Eternal, the Truth Effulgence,
The Limitless Great, Nandi, the Joyous One,
He of the Blissful Dance that all impurity dispels.
                                          
92: நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்
நந்தி அருளால்மெய்ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நானிருந் தேனே.

With Nandi's Grace I sought the Primal Cause,
With Nandi's Grace I Sadashiv became,
With Nandi's Grace Truth Divine attained,
With Nandi's Grace I so remained.

93: இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே.

In the countless measures that are in Veda Rig,
He indwells with His radiant locks;
The Sun and Moon with their splendid argent rays,
In vain they melt the waxing lustre of His glowing locks.

94: பிதற்றுகின் றேனென்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனு மாமே.

Unceasing, I prattle daily Nandi's name,
By day praise Him in thought and ;by night as well,
Daily I yearn for my Master, the Light-Hued,
The Lord of the uncreated Radiant Flame.

அவையடக்கம் IN HUMILITY

95: ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை
யாரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே.

Who can know the greatness of our Lord!
Who can measure His length and breadth!
He is the mighty nameless Flame;
Whose unknown beginnings I venture to speak.

No comments:

Post a Comment