Pages

Saturday, November 24, 2012

S.No: 0004 (verse 16-20)

16: கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே.

He, of the matted locks, the odorous Konrai clustering,
He, of the Divine Consort with forehead divinely gleaming,
He, whom the Immortals and Devas sought,
Wisdom to learn, Ignorance to dispel.

17: காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்
மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.

Howe'er well the two garlics and musk boil and mix,
Yet will musk's fragrance stand o'ertopping all,
So may all space mix and hold the God as One,
Yet, upwelling, pours forth Isan's love profound.

18: அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்
இதுபதி கொள்என்ற எம்பெரு மானே.

The Supreme Lord saw Alagai King's penance devout,
Much pleased, He made the King Lord of all Riches;
Even so, approach the Lord, noble deeds performing;
For thus says the Lord, "Hold this lordship!"

19: இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே.

He, the Wisdom Primeval, He made the City Ancient
Of the seven meadows, fragrant-spiced;
He fixed the Moon, and to penance inclining,
He abides there, making that His seat.

20: முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்ற மலையது தானே.

Seek the Abode of the Holy,
Who, of yore, created Birth and Death
A high hill it is, where thunders roar and lightnings flash,
Where fragrant flowers bud and bloom,
His mighty likeness it bears.

No comments:

Post a Comment