Pages

Sunday, January 27, 2013

[hymn 154] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


154: முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர்செப்ப மதிலுடைக் கோயில் சிதைந்தபின்ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.

பொருள் விளக்கம்
------------------------------
முப்பதும், முப்பதும், முப்பத்தாறும் தொண்ணுற்றாறு தத்துவங்கள். 
அவை _/|\_
ஆன்மத்துவம்-24,
நாடி-10, 
அவத்தை -5, 
மலம் -3, 
குணம் -3, 
மண்டலம் -3, 
பிணி -3, 
விகாரம் -8, 
ஆதாரம் -6, 
தாது -7, 
மரபு -10, 
கோசம் -5, 
வாயில் -9 
....................................
ஆக மொத்தம் -96
...................................
இந்த 96 தத்துவங்களும் செம்மையாக அமைந்த பாதுகாப்பு மதிலுடைய கோயிலுக்குள் வாழ்ப்வர், சிறப்பாகச் செய்யப்பட்ட பாதுகாப்பு மதிலுடைய அந்தக் கோயில் பாழடைந்து, பழுதடைந்து கெட்ட பிறகு, அந்தக் கோயிலுள் இருந்தவர்கள் அனைவரும் ஒருசேர ஓடிவிட்டார்கள். உயிர்போய் உடல் அழியத் தத்துவங்கள் தாமே நீங்கும் என்பது கருத்து. செப்ப- சிறப்பாக, செம்மையாக. மதிள்- மதில். சிதைதல் - கேட்டழிதல். ஓப்ப - ஒன்றாக.

Romanized
--------------
muppatum muppatum muppat taṟuvarum
ceppa matiḷuṭaik kōyiluḷ vāḻpavar
ceppa matiluṭaik kōyil citaintapiṉ
oppa aṉaivarum ōṭṭeṭut tārkaḷē.

Meaning-[The Body Temple Crumbled; the Ninty-Six Tattvas Fled]

----------------------------------------------------
The thirty and thirty and thirty-six they say,
They that behind temple walls safely dwelt,
They saw the temple walls crash and crumble,
And all alike, without a trace, thence did melt.

Saturday, January 26, 2013

[hymn 153] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

153: நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன்று ஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.


பொருள் விளக்கம்
------------------------------
ஒருவன் நமது நாட்டிற்கே தலைவன் தான்; `அவன் நம் ஊரவன்` என்பதில் நமக்குப் பெருமைதான்; ஆயினும், நடை முறையில் நிகழ்வது, அவனும் காட்டுக்குப் போதற்குரிய ஒரு பல்லக்கின் மேல் ஏறி, நாட்டில் உள்ளோர் பலர் பின்னே நடந்து செல்ல, முன்னே பறைகள் பல கொட்டச் செல்லுகின்ற முறைமைதான்; வேறில்லை.

Romanized
--------------
nāṭṭukku nāyakaṉ nammūrt talaimakaṉ
kāṭṭuc civikaiyoṉ ṟēṟik kaṭaimuṟai
nāṭṭārkaḷ piṉcella muṉṉē paṟaikoṭṭa
nāṭṭukku nampi naṭakkiṉṟa vāṟē.

Meaning-[Final Procession to Grave]
----------------------------------------------------
Lord was he of our land, sole leader of our place,
Mounted now on palanquin for the ultimate journey's end;
Mourners walked behind, clashing drums beat afore;
Thus did the solemn show, in ample length, extend.
---thevaram.org

Thursday, January 24, 2013

[hymn 152] Daily 1 hymn of Thirumanthiram with Explanation



152
பந்தல் பிரிந்தது பதண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தனை
துன்புறு காலந் துரிசுவர மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்கேள.

பொருள் விளக்கம்
------------------------------
பந்தல்-உடலாகிய மேல் போர்வை. பண்டாரம்- களஞ்சியம்-உயிராகிய பொக்கிசம். ஒன்பது வாசல்- உடலில் உள்ள ஒன்பது வழிகள். கண்கள் இரண்டு,செவிகள் இரண்டு. மூக்கு துவாரங்கள் இரண்டு. வாய் ஒன்று, சிறுநீர், மலப்பாதை என ஒன்பது.ஒக்க – ஒருசேர.துரிசுவர- முடிவுகாலம் நெருங்க. உயிரின் மேல் அமைந்லுடலாகிய பந்தல் பாழடைந்து விட்டது. உயிர்ச் செல்வம் வறண்டு விட்டது.ஒன்பது வாசல் கதவுகளும் ஒரே நேரத்தில் அடைத்து விட்டன.உயிர்க்கு முடிவுகாலம் வந்து விட்டது.அன்புடைய சுற்றத்தார் அழுது புலம்பினார்கள். பின்னவர்களும் போய்விட்டனர். இதுதான் வாழ்க்கை, உலகியல் என்பது உணர்த்தும் பாடல் இது.

Romanized
--------------
pantal pirintatu pataṇṭāraṅ kaṭṭaṟṟa
oṉpatu vācalum okka aṭaittaṉai
tuṉpuṟu kālan turicuvara mēṉmēl
aṉpuṭai yārkaḷ aḻutakaṉ ṟārkēḷa.

Meaning-[Kith and Kin Wept and Left]
---------------------------------------------------
The roof to pieces went the bonds of life broke loose,
The mansion’s nine gates closed fast for ever and aye,
Time’s painful march fast gaining apace,
One by one weeping they left him as the hours passed by.