Pages

Saturday, January 19, 2013

[hymn 146] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

146:  
காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுள
பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புக அறி யாதே.

பொருள் விளக்கம்
-----------------------
 உடம்பாகிய இல்லத்திற்குத் தாங்கும் தூண்களும் (நடக்கின்ற கால்கள்) இரண்டு உள்ளன. மேட்டு உத்தரமும் (முது கெலும்பு) ஒன்று உண்டு. அவ்வுத்தரத்தின் இருபக்கங்களிலும் சார்த்தப் படுகின்ற பருத்த கழிகளும் (விலா எலும்புகளும் - பக்கத்திற்குப் பதினாறாக) முப்பத்திரண்டு உள்ளன. மேலே வேயப்பட்ட கூரை களும் (பலவகையான தோல்கள்) உள்ளன. இருப்பினும். உயிர் இந்த இல்லத்தில் நிலைத்திருப்பதில்லை; என்றாயினும் ஒரு நாள் புறப் பட்டுப் போய்விடும். போய்விட்டால் மீள வந்து முன்போல இதனுட் புகுதல் இல்லை.
Romanized
--------------
 kālum iraṇṭu mukaṭṭalaku oṉṟuḷa
pāluḷ paruṅkaḻi muppat tiraṇṭuḷa
mēluḷa kūrai piriyum pirintālmuṉ
pōluyir mīḷap puka aṟi yātē.
Meaning-[When Body Roof Falls, It Falls Forever ]
-------------------------------------------------
Two pillars support this roof and one single beam,
Thirty and two the rafters extend side ways,
But as the roof above decays and breaks,
Back to its mansion the breath of life fails its way to trace.

Thursday, January 17, 2013

[hymn 145] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


145
 ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
போனை நீக்கிப் பிணமென்று போட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. 

பொருள் விளக்கம்
---------------------------------
உடம்பு விழுந்தபின் இல்லத்தளவில் செயற்படு வோராகிய பெண்டிரும், மக்களுமேயன்றி, ஒருங்கு திரண்டு பல வற்றைச் செய்து முடிப்போராகிய ஊரவரேனும் பிரிந்தோருடன் செல்ல வல்லரோ எனின், அல்லர்; அவரும் அப்பெண்டிர் மக்களுடன் ஒருங்கு கூடி முன்னர்ப் பேரொலி உண்டாக அழுது, பின் அது காறும் அவர்க்குக் கூறி அழுத இயற்பெயர் சிறப்புப் பெயர்களை ஒழித்து, `பிணம்` என்னும் பெயரையே சொல்லி எடுத்துக் கொண்டு போய், `சூரை` என்னும் ஒருவகை முட்செடிகள் நிரம்பியுள்ள காட்டில் வைத்து எரித்து விட்டுத் தீட்டுப் போதற்கு நீரினுள் மூழ்கித் தூய்மை பெற்றா ராய்ப் பின்பு அவரைப் பற்றிய நினைவும் இல்லாதவரே ஆவர்.




Romanized
--------------
ūrelām kūṭi olikka aḻutiṭṭup
pōṉai nīkkip piṇameṉṟu pōṭṭuc
cūraiyaṅ kāṭṭiṭaik koṇṭupōyc cuṭṭiṭṭu
nīriṉil mūḻki niṉaippoḻin tārkaḷē. 


Meaning-[How Soon the Dead are Forgotten]
-----------------------------------------------------------
The neighbours gathered wailing loud and long, 
Denied him now a name, called him corpse, 
And bore him to the burning ghat and the body burnt, 
Then a ceremonial dip--and memory dies as the hours lapse. 

Wednesday, January 16, 2013

[hymn 144] Daily 1 hymn of Thirumanthiram with Explanation



144:   பண்டம்பெய் கூரை பதழகிய விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மெக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே. 
பொருள் விளக்கம்
------------------------------
பண்டம் என்றால் பொருள். இங்கே நல்வினைகள் தீவினைகள். பெய்நிரப்பப்பட்ட. கூரை- உடல். நல்வினை தீவினைகளை நுகர்வதற்கென்றே பெற்ற உடல், பழசாகி வயது முதிர்ந்து, தளர்ந்து விட்டால் (இறந்து ஒரு நாள் பிணமாக் கீழே விழுந்துவிட்டால்), உயிருடன் இருக்கும் போது அவ்வுடலால் பயன் அடைந்த(உண்ட-பயன்பெற்ற) மனைவி மக்கள் அந்த உயிர் போன வழியே போக மாட்டார்கள். அதாவது, இறந்த உடலைத் தாங்களும் இறந்துவிட மாட்டார்கள். ஆனால், அந்த உயிர் வாழும்போது செய்த நல்லறம், மேற்கொண்ட ஒழுக்கம், புண்ணிய செயல்கள் அந்த உயிர்க்கு துணையாக நெருங்கி நிழலாகச் செல்லும். மற்றவை எதுவும் கூட வராது. கூட வருவது செய்த புண்ணிய பாவங்களே( மண்டி-நெருங்கி).
Romanized
--------------
paṇṭampey kūrai pataḻakiya viḻuntakkāl
uṇṭaap peṇṭirum mekkaḷum piṉcelār
koṇṭa viratamum ñāṉamum allatu
maṇṭi avaruṭaṉ vaḻinaṭa vātē.
Meaning-[Your Vigil and Wisdom Alone Accompany Departing Soul]
-----------------------------------------------------------------------------
This roof of delights when by use to pieces falls’
Wife nor children who all enjoyed follow the parting Soul’
Only the holy vigils kept and wisdom gained--
Remain to save others dwindle and desert us all.