Pages

Monday, December 31, 2012

[hymn-128]-Daily 1 hymn of Thirumanthiram with Explanation


128
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கியடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்
சோம்பர் கண்டார் அச்சுருதிக்கண் தூக்கமே.

பொருள் விளக்கம்
---------------------------------
செயலற்றவர்கள் இருக்குமிடம், தாயுமானவர் பாடியபடி, சிந்தை அடக்கியே சும்ம இருப்பவர்கள் இருக்குமிடம்- தூய பரவெளியாகிய சிவ வெளியிலே அவர்கள் செயலற்றுச் சிந்தையை அடக்கிச் சும்மா கிடப்பதும், அந்தத் தூயதான பரவெளியிலேயே ஆகும். இவர்கள் உணர்வுகள் ஒன்றி இருப்பதும் வேத முடிவான சிவ பெருமான் திருவடிகலேயே. இப்படி செயலற்று நிற்கும் சித்தர்கள்(சோம்பர்) வேதம் ஓதும் விமலனை எண்ணியே யோக நித்திரையும், இன்பத்துயிலும் கண்டனர். சுருதி- வேதம். தூக்கம்- யோக நித்திரை, இன்பத் துயில். சித்தர்கள் தம்மை மறந்து பரவெளியிலேயே இருப்பர், கிடப்பர், உணர்வர், உறங்குனவர் எனபதாம்.இது யோக நிலை. சமாதி அனுபவம்.

Romanized
---------------
cōmpar iruppatu cutta veiyilē
cōmpar kiyaappatum cutta veiyilē
cōmpar uarvu curuti muinti
cōmpar kaṇṭār accurutikka tūkkamē.

MEANING-[Nature of Divine Impassivity]
-----------------------------
Nature of Divine Impassivity
In space pure is Impassivity seated
In space pure It does repose
Impassivity begins where Vedas end
Who Impassivity saw inside Vedas they slept

Sunday, December 30, 2012

[hymn-127]-Daily 1 hymn of Thirumanthiram with Explanation

127
சிவமாகிய எங்குந் தாமாகிய
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கிய
இருந்தார் முக்காலைத்து இயல்பைதக் குறித்தங்கு
இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே.

பொருள் விளக்கம்:
-------------------------
சித்தத்துள்ளே சிவனைக் காண்பதே பிறவிப் பயன் என்று இருந்த சித்தர் பெருமக்கள், சிவசொரூபமாகி (சிவம் ஆகி) எங்கும் – காணும் இடமெல்லாம் காணப்படுபவர்கள் தாங்களே ஆகி, எங்கும் நிறைந்திருந்தனர். நடப்பவை யெல்லாம் சிவன் செயல் என்று கண்டுணர்ந்தனர்(நோக்கி). நிகழ்காலம் எதிர்காலம் இறந்தகாலம் என்னும் முக்காலங்களின் இயல்பையும் அறிந்து, நான் எனது என்னும் செருக்கொழிந்து (இழிவு எய்திச்) செயலற்றிருந்தனர். சோம்பு- செயலற்றிருத்தல். அருணகிரியார் சொன்ன “ சும்மா இரு சொல் அற”. என்ற நிலை இதுவே.

Romanized
-------------
civamākiya ekun tāmākiya
iruntār civaceyal yāvaiyum nōkkiya
iruntār mukkālaittu iyalpaitak kuittaku
iruntār iavuvantu eytiya cōmpē.


MEANING-[Siddhas Lose Themselves in Divine Impassivity ]
---------------------------------------------
-->

In Siva they remained seeing themselves in all
Remained thus mutely gazing at Siva s works manifold
In silence witnessing Time s three tenses
They remained lost
While Divine Impassivity spread its sable wings.

Saturday, December 29, 2012

[hymn-126]-Daily 1 hymn of Thirumanthiram with Explanation

126: 
ஆறும் பதடிமுத்தி ஏணியாய்
ஒப்பில்லா ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்பத அரிய சிவங்கண்ட தான்தெளிந்து
அப்பதரி சாக அமெர்ந்திருந் தாரே. 

பொருள் விளக்கம்:
-------------------------
 படி- ஏறும் படி. முத்தி- பேரின்ப வீடு.ஏணி- மேல் ஏற உதவுது. முப்பதும் ஆறும்- முப்பதாறு. முப்பதாறு தத்துவங்கள். அவை- ஆன்ம தத்துவம்-24, வித்தியா தத்துவம்-7, சிவ தத்துவம்-5 என முப்பத்தாறு. தத்துவம் என்பதற்குப் பொருள் இறைவனை அடைய உதவும் வழி. இந்த முப்பதாறு வழிகளையும் ஏணிப் படிகளாகக் கொண்டு, மேலேறி(மூலாதாரத்தை அடைந்து) ஆங்கே ஒப்புவமை இல்லாத இறைவனின் ஆனந்த தாண்டவம் தன் உள்ளத்தில் ஒளி வெள்ளமாய்ப் பரவி நிற்க, அந்த ஒளி வெள்ளத்தில் சொல்லுதற்கு இயலாத(செப்பரிய) பெருமை உடைய சிவப்பரம் பொருளைக் கண்டு, அத்வே மெய்ப்பொருள் எனத் தெரிந்து(தெளிந்து) அந்தத் தெளிந்த ஞான நிலையே பிறவிப் பயன் என்று இருந்தவர்கள் ஞானிகள்.


Romanized
-------------
āṟum pataṭimutti ēṇiyāy
oppilaa āṉaintat tuḷḷoḷi pukkuc
ceppata ariya civaṅkaṇṭa tāṉteḷintu
appatari cāka amerntirun tārē.

MEANING-[They Walk Into Light of Siva ]
---------------------------------------------
Ascending thus the steps,
Thirty and six of Freedom's ladder high,
Into the peerless Light of Bliss they walked;
And Siva, the inexplicable, they saw--
Having seen, realized and so stayed.